Monday, April 26, 2010

ஐ.பி.எல் -"சென்னை அணி தோற்றிருக்கலாமே",சென்னைவாசியின் ஆதங்கம்.        ஒன்றரை மாதங்களாக நடந்து கொண்டிருந்த 20-20 போட்டிகள் ஒரு 
வழியாக முடிந்து விட்டது.. சென்னை அணி வாகை சூடி விட்டது... நானும் சென்னையை சார்ந்தவன்தான்..ஆனால் சென்னை தோற்றிருக்கலாமே 
என்று தோன்றியது.. அதற்கு ஒரே காரணம் சச்சின்..

ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்தி கொண்டிருந்த மும்பை அணி இறுதியிலும் 
வென்று விடும் என்றே நினைத்தேன்.. என் மனதினில் கோப்பையை சச்சின் 
பெற்றுக்கொண்டு பெருமிதம் பொங்க பரிசளிப்பு விழாவில் ரவிசாஸ்திரியிடம் 
தனக்கே உரித்தான மெல்லிய குரலில் பேட்டியளிப்பார் என்றெல்லாம் 
கற்பனை செய்து வைத்திருந்தேன்..

அனைவருமே போட்டியை பார்த்திருப்பீர்கள். எனவே எப்படி சென்னை வென்றது, எப்படி மும்பை தோற்றது என்றெல்லாம் நான் சொல்லிக்கொண்டு இருந்தால் வலது மேற்புறத்தில் இருக்கும் 'X' பொத்தானை அமுக்கிவிடுவீர்கள் என்று நானறிவேன்...

ஆனால் ஏன் சென்னை தோற்று இருக்க வேண்டும் என்று ஒரு சென்னைவாசியான நான் நினைக்க வேண்டும் என்று நீங்கள் கேக்கலாம்.. சென்னை அணி ஒன்றும் சென்னை வீரர்களின் திறமையை கொண்டோ, தமிழக வீரர்களின் திறமையை கொண்டோ, கோப்பையை வென்றிருக்கவில்லை. தோனி, பௌலிங்கர் போன்றோரையே சார்ந்திருந்தது.. தமிழக தொழிலதிபர் வாங்கியதாலேயே,சென்னையின் அணி ஆகிவிடாது.. எனவே சென்னை அணியின் மீது எனக்கு பெரிதாக ஒட்டுதலே இல்லை.. அதுவும் சென்னை அணி எதிர்த்தது சச்சினை... சச்சின் என்றுமே இந்தியர்களின் பிரதிநிதி.. சென்னை அணியா, இந்திய சாதனை மன்னனா என்று வந்ததால், ஒரு இந்தியனாக சச்சினுக்கே எனது ஆதரவு கிட்டியது... சென்னை அணியின் சரிவை கொண்டாடினேன்.. ( ஆனால் கடைசியில் எனது தம்பியிடமும், தந்தையிடமும் மூக்கு உடைபட்டது வேறு விஷயம்.. பரவாயில்லை.. சச்சினுக்க்காகத்தானே... )

சச்சின் எத்தனையோ வெற்றிகளை பெற்றிருக்கலாம்.. ஆனால் இந்த கோப்பை அவருக்கு மிகப்பெரிய பெருமிதத்தை தந்திருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.. ஏனென்றால் அவர் இந்த தடவை,தனது கிரிக்கெட் வாழ்வின் ஒரேயொரு கரும்புள்ளியான 'கேப்டன்'பதவிக்கு லாயக்கில்லாதவர் என்ற கரையை துடைத்து எறியும் வாய்ப்பு பெற்றிருந்தார்..அதுவும் இந்தியாவின் வெற்றிகரமான கேப்டன் தோனியிடம் வெற்றிக் கோப்பையை பறித்து தன்னை சிறந்த அணித்தலைவராகவும் பதிவு செய்திருப்பார்...


தோனிக்கு வாய்த்ததை போன்றதொரு சிறந்த அணி சச்சின் கேப்டன் ஆக இருந்த போது அவருக்கு வாய்க்கவில்லை. ஆனால் கங்குலி போன்றதொரு சிறந்த கேப்டன் உருவாக்கி கொடுத்த அணியை கொண்டு, டோனி பெற்றுக்கொண்டிருக்கும் வெற்றிகள், சச்சினுக்கு நிச்சயமாக அணித்தலைவராக தான் சோபிக்க முடியவில்லை என்ற வருத்தத்தை அடிக்கடி கொடுத்துக் கொண்டிருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை... இந்திய அணியின் வெற்றிகள் சச்சினுக்கு வருத்தம் தருகிறது என்று சொல்லவில்லை... அணித்தலைவராக தோனியின் வெற்றிகள் நிச்சயமாக சச்சினுக்கு வருத்தத்தை தந்திருக்கும்..

ஐ.பி.எல். கோப்பை அந்த வருத்தத்தை நீக்கியிருக்கும்... தோனிக்கு ஐ.பி.எல். லில் கிடைக்கும் வெற்றியும், தோல்வியும் எந்த ஒரு பாதிப்பையும் ஏற்படுத்தாது.. ஏனென்றால் இந்திய அணியின் வெற்றிகரமான கேப்டன் அவர்..ஆனால் சச்சினுக்கு வெற்றி கிடைத்திருந்தால் நிச்சயமாக அவர் தனது நீண்ட நாள் மனப் புழுக்கத்தில் இருந்து விடுதலை பெற்றிருப்பார்.. கோடிக்கணக்கான இந்தியர்களுக்கு சந்தோஷத்தையும் பெருமிதத்தையும் தரும் சச்சின் சந்தோஷப்படவும், பெருமிதப்படவும் வாய்ப்பில்லாமல் போய்விட்டதை எண்ணினால் வருத்தமாக இருக்கிறது..

கோப்பையை வெல்ல தகுதியான அணியும் சச்சினின் அணிதான்.. தோனியின் அதிர்ஷ்டகரமான வெற்றியினை இன்னொருமுறை காண்பதற்காக தான், தனது அணியை தனது சிறப்பான ஆட்டத்தால் இறுதி போட்டிக்கு கொண்டு சென்றோமா என்று கூட சச்சின் நினைத்திருக்கலாம்.. சச்சின் ஒன்றும் பொறாமை குணம் கொண்டவர் இல்லை.. ஆனால் வெற்றிகளின் மேல் ஆசை இல்லாதவர் இல்லை..  அவ்வாறு ஆசை இல்லாதவராக இருந்தால் இத்தனை சாதனைகளை அவர் புரிந்திருக்கவே முடியாது.. இன்னொரு முறை ஒரு அணித்தலைவராக தனது மிகப் பெரிய வெற்றியை சச்சின் பெறுவதுற்கு வாய்ப்பு கிடைக்குமா என்பது மிகப் பெரிய சந்தேகம் தான்.. ஆனால் சந்தேகமே இல்லாத பிரபலமான வாசகம்....
"கிரிக்கெட் ஒரு மதம் என்றால், சச்சின் அதன் ஒரேக் கடவுள்" 

24 comments:

யாழிபாபா said...

very very good one
it s true too

Anonymous said...

fixed match

Ganesh said...

அட இன்னுமா ஐபிஎல்ல நம்பிகிட்டு இருகீங்க? எல்லாமே பெட்டு, காசு பாஸு... மும்பை ஜெயிக்கிறமாதிரி போராடி தோக்கும்கிறது ஆட்டம் ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடியே தெரியும்.... ஏன்னா, பெட்டிங் காசு மும்பை மேல அதிகமாயிடுச்சி. அத கவுத்திவிட்டு சென்னைய ஜெயிக்க வைக்கணும்கிறது தான் பிளான். அது மட்டும் இல்லாம, நம்ம சீனிவாசன் பி.சி.சி.ஐல ஒரு மெம்பர். அவரோட டீம் ஜெயிக்க வைக்க அவருக்குத் தெரியாதா?

இதெல்லாம் எனக்கு சென்னை, டெக்கான் செமி-ஃபைனல் மேட்சுலயே தெரிஞ்சுடுச்சு.

நாடோடித்தோழன் said...

@யாழிபாபா..

வருகைக்கு நன்றி யாழிபாபா..


@Anonymous
fixed matchஅவ்வாறு இருக்காது என்று நம்பும் அப்பாவிகளில் நானும் ஒருவன்..

Anonymous said...

Whatever you said about Sachin is correct. I also feel for Sachin. But, cricket is not a game to be played only on the ground... there are lot of mind game involved in that... that is the point where Dhoni beat Sachin and MI paid the price for that yesterday.

I want to remind you one thing... There were big contributions from three Tamilnadu players... Vijay(selected for T20 Worldcup to replace Sehwag), Badri and Ashwin. Nobody should say NO to this... But as you said there were big contributions from National and Foreign Players in chennai's campaign!

SShathiesh-சதீஷ். said...

வித்தியாசமா சிந்தித்திருக்கின்றீர்கள். நீங்கள் சச்சினின் மனச்சாட்சியா?

செல்வா said...

சென்னை கிங்க்ஸ் அணி பார்ப்பனிய ஆதிக்கம் செலுத்தும் அணி. அதில் இடம் பிடித்திருக்கும் அனைத்து சென்னைப் பையன்களும் பார்ப்பனியர்கள். பல நல்ல நல்ல தமிழ்நாட்டு வீரர்களுக்கு இடம் கொடுக்கப் படவில்லை. அத்னாலேயே எனக்கு இந்த அணியை பிடிக்காது.

இது நான் எனது நண்பனிடம் (தமிழ்நாட்டு அணி வீரர்) கேட்டுப் பெற்ற செய்தி

நாடோடித்தோழன் said...

@Ganesh said...
//அட இன்னுமா ஐபிஎல்ல நம்பிகிட்டு இருகீங்க?..//

சில சாதனையாளர்களின் சிறப்பான ஆட்டத்தை ரசிப்பதற்காக மேட்ச் பிக்ஸிங் பற்றி நான் பெரிதாக யோசிப்பதில்லை.. ஆனால் உங்கள் கருத்திலும் உண்மை இருக்கலாம்.. சிதறியதற்கு நன்றி...

நாடோடித்தோழன் said...

@Anonymous said...
//Whatever you said about Sachin is correct. I also feel for Sachin......
I want to remind you one thing... There were big contributions from three Tamilnadu players... Vijay(selected for T20 Worldcup to replace Sehwag), Badri and Ashwin. Nobody should say NO to this...//
உங்கள் கருத்து உண்மையே.. ஆனால் வெளிநாட்டு வீரர்களுக்கான கட்டுப்பாடு இல்லையெனில் நிச்சயமாக இவர்களுக்கு இடமே இருந்திருக்காது...சிறிதளவேனும் தேசிய அணியில் தமிழக வீரர்கள் இடம்பெறுவதற்கு ஸ்ரீகாந்தே காரணம்...

நாடோடித்தோழன் said...

@SShathiesh-சதீஷ். said...
// வித்தியாசமா சிந்தித்திருக்கின்றீர்கள். நீங்கள் சச்சினின் மனச்சாட்சியா?//
மனிதர்களின் மன ஓட்டத்தை சிறிதளவேனும் யூகிக்கத் தெரிந்தவன்.. அவ்வளவுதான்.. சிதறியதற்கு நன்றி...

நாடோடித்தோழன் said...

@செல்வா said...
//சென்னை கிங்க்ஸ் அணி பார்ப்பனிய ஆதிக்கம் செலுத்தும் அணி...//
அனைத்து பிரிவினரும் தங்களது ஆதிக்கத்தை செலுத்த வாய்ப்பு கிடைத்தால் ஆதிக்கவாதிகளே.. நீங்கள் சொன்னவாறு சென்னை அணியிலும் பார்ப்பனிய ஆதிக்கம் இருக்கலாம்... சிதறியதற்கு நன்றி...

எல் கே said...

ithilum tevai atra jathiyai seluthatheergal enbathe anthu vendugol.
@nadodi

the angle what u have seen is correct. buit if u take 3 ipls overall, chennai is the consisten team

ARV Loshan said...

நான் கூட சென்னையின் வெற்றியில் மகிழ்ந்த ஒருவன் தான்.. உங்கள் பதிவை வாசித்த பின்னர் தான் மனதில் சச்சின் மேல் கொஞ்சம் பரிதாபம்..
இனி எப்போதுமே இப்படி ஒரு சந்தர்ப்பம் வராது

நாடோடித்தோழன் said...

@@LK said...

அனைத்து மட்டங்களிலும் ஜாதி பேதம் இருக்கக் கூடாது என்பதே இன்றைய இளம் தலைமுறையினர் பலரின் எண்ணம்.. இந்த நிலை சீக்கிரமாகவே மாறும்.. நிலையான ஆட்டத்தை சென்னை அணி வெளிப்படுத்துகிறது என்பதை நானும் ஏற்கிறேன்..ஆனால் இந்த ஐபிஎல்-இல் மும்பையே சிறந்த அணி.. வருகைக்கு நன்றி நண்பரே..
----------------------------------

@@LOSHAN..
ஆம் நண்பரே.. சச்சின் மும்பை அணியில் இல்லையென்றால் நானும் சென்னையின் வெற்றியில் பெரிதும் மகிழ்ந்திருப்பேன்..

jeankarthik said...

this championship came only because of dhoni's captaincy, murali vijay and raina's batting display and ashwin and bollinger's bowling performance

Anonymous said...

Poya loosu. Unakku Badri, Vijay, Ashwin ellam kannuku theriyalaya? Solra vishyatha oru justification oda sollu. Summa kanmoodi thanama sollatha. I like Sachin. But I love CSK.

Rangarajan Ayengar said...

Sachin is an excellent Player but at the same time a Poor Captain. No point in saying that he did not have good team. As a Captain he failed in his batting also. He invaraiably(almost) fails in the crucial moment e.g WC2003 Final.

I like Sachin but somehow feel that he cannot handle Pressure when needed the most. After Playing for a couple of decades he is yet to win a winners medal in WC.

Had u watched the Finals you would have seen that the Stadium was half empty during the presentation. Such is the attitude of Mumbai Indians. Ravi Shastri was literally crying during the presentation and Gavaskar was found missing. Even though this is just a national league, these point out the Mumbaikars attitude. Sachin will not win anything worthy as a captain but as a player a big Yes.

I love Sachin but Mumbai Indians needed to be kicked out. Long Live CSK.

நாடோடித்தோழன் said...

@@Anonymous
//Poya loosu. Unakku Badri, Vijay, Ashwin ellam kannuku theriyalaya?//

ஆம் நண்பா.. நான் சச்சினின் பைத்தியக்காரத்தனமான தீவிர விசிறி.. இந்தியனாக நான் பெருமிதம் கொள்வதற்கு முக்கிய காரணங்களில் சச்சினும் ஒருவர். நீங்கள் சொன்னவாறு விஜய், அஸ்வின், பத்ரி ஆகியோர் சிறப்பாகவே விளையாடி இருந்தாலும் csk அணியை சென்னையின் அணியாக என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது.. யாரோ சென்னையை சேர்ந்த மூவர் csk அணியில் இருக்கிறார்கள் என்பதற்காக என் நாட்டின் பொக்கிஷமான சச்சினை நான் எதிர்க்க முடியாது. தோனி, ரெய்னா, ஹெய்டன் ஆகியோர் இல்லையென்றால் csk அணிக்கு சென்னையிலேயே ஆதரவு இருக்காது. csk-மும்பை அணி சென்னையில் மோதிய போது, சச்சினுக்கு ஆதரவு தருவதா அல்லது csk அணிக்கு ஆதரவு தருவதா என்று சேப்பாக்கம் மைதானத்தில் இருந்தவர்களே திணறிப் போயினர். சச்சின் ஆடும் போது முழு ஆதரவு கொடுத்தனர். சென்னையின் ரசிகர்கள் தெளிவாகவே உள்ளனர்.

நாடோடித்தோழன் said...

@@Rangarajan Ayengar said...
//Sachin is an excellent Player but at the same time a Poor Captain. No point in saying that he did not have good team. As a Captain he failed in his batting also//
அணியின் வெற்றி ஒட்டுமொத்த அணியினரை சார்ந்தது. தோனி ஜிம்பாப்வே அணிக்கு கேப்டன் ஆக இருந்திருந்தால் அவர் இந்த அளவிற்கு வெற்றி பெற்றிருக்க வாய்ப்பில்லை.

//He invaraiably(almost) fails in the crucial moment e.g WC2003 Final.//
அந்த உலகக் கோப்பையில் அதிக ரன்கள் சேர்த்தவர் சச்சின் என்பதை நீங்கள் மறக்கவில்லையே.
நண்பரே..

//I like Sachin but somehow feel that he cannot handle Pressure when needed the most.
After Playing for a couple of decades he is yet to win a winners medal in WC.//
கொஞ்சம் இங்கே பாருங்களேன்..

//Even though this is just a national league, these point out the Mumbaikars attitude.//
உங்களுடன் முழுவதும் ஒத்துப் போகிறேன். சென்னையில் இரு அணிகளும் மோதிய போது நாம் சச்சினுக்கு கொடுத்த வரவேற்பு நமது பரந்த மனப்பான்மையை காட்டியது. இங்கு இறுதி போட்டி நடந்திருந்து, மும்பை வெற்றி பெற்றிருந்தால் நாம் நிச்சயமாக மும்பை அணியின் வெற்றியையும் கொண்டாடி இருப்போம். ஆனால் சச்சின் இந்தியன்..

நாடோடித்தோழன் said...
This comment has been removed by the author.
நாடோடித்தோழன் said...

@@jeankarthik said...
//this championship came only because of dhoni's captaincy... //
ஆம் நண்பரே.. அவர் சிறந்த கேப்டன் என்பதில் சந்தேகமில்லை.. வருகைக்கு நன்றி..

@@Rangarajan Ayengar said...
வருகைக்கு நன்றி..

Rangarajan Ayengar said...

Saw the link as mentioned by u. Thanks for the link.

Now coming to the Match Winning scenario. Match Winning is nothing but finishing the innings in style and not leaving anything left to be done.

The Instances are as follows.

1. Century against Pakistan in the 2nd Innings of the Chennai Test in 1998/99 - was out when the runs needed was less than 20. He knew that only tail enders were to follow. A match winner would have finished it.

2. WC2003 Final - Scored in almost all the WC matches. Failed while chasing a Huge score. Pressure again.

3. When chasing 350 against Australia on ODI, he was out on 175 when less than 20 runs were needed. Poor finishing.

4. Sachin is yet to play an innnings like 281 by Laxman played under immense pressure. He wilts in pressure on important occasion.

The list can go on and on.

This does not mean that the runs cored by him are useless. Remeber a saying "A sticth in time saves nine". Need to hit the needed couple of runs in a crucial match rather than hitting centuries in less important matches.

One more question I want to pose here is that Sachin is not playing T20 for India citing his own reasons. But why is he playing for MI. For money? A god is not after money but may be ur so called god is after money (No hard feelings. Meant not to hurt u. Just my view)

Regarding captaincy. It is a gift in cricket. Sachin is not having it. U need to accpet it. Saurav had and now Dhoni has it. Learn to accept it. No point in saying that Dhoni cannot win when he is in Bangladesh. Dhoni has proved his captaincy by wnning T20 WC. He is also an Indian. Then y this step motherly treatment to him.

நாடோடித்தோழன் said...

//Century against Pakistan in the 2nd Innings of the Chennai Test in 1998/99 - was out when the runs needed was less than 20. He knew that only tail enders were to follow. A match winner would have finished it.//
இடுப்பு வலியை பொருட்படுத்தாமல் 'Band ' ஐ கட்டிக்கொண்டு அந்த போட்டியில் தனியொருவராக வெற்றிப்பாதைக்கு கூட்டிக்கொண்டு போனது உங்களுக்கு மறந்து விட்டதா.. 82/5 என்றிருந்த நிலையில்இருந்த அணியை தனியாளாக வெற்றிபெறும் நிலைக்கு கூட்டி சென்றது உங்களுக்கு தெரியவில்லை..

//WC2003 Final - Scored in almost all the WC matches. Failed while chasing a Huge score. Pressure again.//
உலகக் கோப்பையில் விளையாடுவதே பிரஷர் தருவது தான். அந்த வருடப் போட்டியில் அவர் அதிக ரன்கள் பெற்றது தன் மீது இருந்த பிரஷர்-ஐயும் தாங்கி கொண்டு தான்.. ஆனால் இறுதிப் போட்டிதான் உங்களுக்கு தெரிகிறது...

//When chasing 350 against Australia on ODI, he was out on 175 when less than 20 runs were needed. Poor finishing.//
பாகிஸ்தான் போட்டிக்கான பதில் தான் இங்கும்.. அது எப்படி 175 ரன்கள் அடிக்கும் போது 'பிரஷர்' இல்லாமல் இருந்திருக்கும். கடைசி 20 ரன்களில் பதட்டமடைந்து விட்டாரா..

//Sachin is yet to play an innnings like 281 by Laxman played under immense pressure. He wilts in pressure on important occasion.//
திறமை என்பது ஏதோ ஒரு நாளில் காட்டிவிட்டு போவது அல்ல.. தொடர்ந்து நிரூபிக்க வேண்டும்.. 20 வருடங்களாக தொய்வில்லாமல் வெளிப்படுத்துவதே திறமை..

நீங்கள் மேற்கூறிய இருப்போட்டிகளிலும் சச்சினும் மற்றவர்களை போல அவுட் ஆகி இருந்தால் நீங்கள் அவரை குறை கூறலாம்.. 20 ரன்கள் தான் தேவை என்பது வரை கொண்டு வந்ததே அவரின் சாதனை தான்.. விளையாட்டுகளில் ஏற்படும் திருப்பமாக தான் அவரின் விக்கெட் பறிபோனதும் இந்தியா தோற்றதும் நடந்தது.. அவரின் திறமை இன்மையால் அல்ல.. ( ஆமாம்.. அந்த link -இல் அவரால் வெற்றி பெற்ற போட்டிகளின் அணிவகுப்பை பார்த்தீர்களா.. சார்ஜா போட்டியை பாரும் நண்பரே.. வீடியோ இருக்கும்.. )

இந்திய இளம் வீரர்களுக்கு வழிவிட்டு அவர் எடுத்த முடிவு 20-20 போட்டிகளில் பங்கேற்க வேண்டாம் என்பது.. அந்த போட்டிகளில் விளையாடினாலும் அவருக்கு கோடிகள் வரத்தான் போகிறது.. தற்போது விளையாட போயிருக்கிறவர்கள் ஊதியம் வாங்காமலா விளையாட போயுள்ளனர்?

//Regarding captaincy. It is a gift in cricket. Sachin is not having it. U need to accpet it. Saurav had and now Dhoni has it.//
தலைவா.. நானும் தாதா ரசிகன் தான்.. சச்சினை விட திறமையான கேப்டன் தாதா.. சச்சினை விட அதிர்ஷ்டகரமான கேப்டன் டோனி.. சச்சினை விட கேப்டன் பதவிக்கு தகுதியானவர்கள் தாதாவும் தோனியும் தான்.. இதில் சந்தேகமே இல்லை.. சச்சின் சிறந்த கேப்டன் என்று நான் என்றுமே கூறியதில்லை...

நண்பரே.. உங்களின் கருத்துக்கள் நிச்சயமாக எனது பதிவிற்கு ஊக்கமளிக்கும் ஒன்றாகவே இருக்கிறது..
தொடர்ந்து என் பதிவை விமர்சிக்க உங்களை அழைக்கிறேன்.. மிக்க நன்றி..

NAGA INTHU said...

eppidy ippady yosickiringey

Post a Comment