Tuesday, April 06, 2010

அங்காடித்தெரு - இது பாராட்டும் விமர்சனம் அல்ல..

அங்காடித் தெரு படம் பார்த்தேன்.. வித்தியாசமாகவே இருந்தது.. நல்ல முயற்சி.. சில படங்கள் என்னை அதிகமாகவே பாதித்துள்ளது.. அந்த அளவுக்கு ஒன்றும் பெரிதாக என்னை பாதிக்கவில்லை என்றே படம் பார்த்து வெளியே வந்ததும் தோன்றியது. அதன் பிறகு பெரிதாக அன்றிரவு வரை எனக்கு ஒன்றும் தோன்றவில்லை... ஆனால் அன்றிரவு சில எண்ணங்கள் மனதினில்... வேலைக்காக இன்னொரு ஆம்பிளையின் அத்துமீறல்களை மனதிற்கு பிடிக்கவில்லை என்றாலும் சகித்து கொள்ள வேண்டிய கட்டாயத்தில் தான் அத்தகைய துணிக்கடைகளில் பெண்கள் பணிபுரிகின்றனரா.. அந்த அளவுக்கு மானம் விட்டு பிழைக்க வேண்டிய சூழ்நிலை அவர்களுக்கு உள்ளதா.. இல்லையெனில் மிகை படுத்த பட்டிருக்கிறதா.. அவ்வாறு அது உண்மையெனில் லாட்ஜ்களில் ரைட் போவதை விட மிக முக்கியமானது அத்தகைய கடைகளில் நடவடிக்கை எடுப்பது.. ஆனால் எல்லா துறைகளிலும் எங்கோ ஒரு மூலையில் நடக்கும் சில அத்துமீறல்கள், இந்த படத்தில் மிகை படுத்தி காட்ட பட்டிருக்கிறதோ என தோன்றுகிறது.. அவ்வாறு எனது எண்ணம் உண்மையெனில் வசந்தபாலன் மிகவும் கண்டனத்திற்குரியவர்.. ஏன் என்றால்.. இப்படத்தில் அஞ்சலியின் கதாப்பாத்திரம் அத்தகைய பணிபுரியும் சிறு வயது பெண்களின் பிரதிநிதியாக தத்ருபமாக படைக்கபட்டிருக்கிறது.. தேர்ந்த நடிப்பு.. வேலைக்காக சூப்பர்வைசர் கசக்கிய போது பேசாமல் இருந்தேன் என அவள் சொல்லும் போது பரிதாபம் பொங்குகிறது.. ஆனால் உண்மையாகவே குடும்பத்தை விட்டு இங்கு பணிபுரியும் மற்ற பகுதிகளை சேர்ந்த பெண்களின் வீட்டில் இந்த படம் அவர்களுக்கு எந்த மாதிரியான பேரை பெற்று தரும்?? அந்த பெண்களை சார்ந்தவர்களிடம் அவர்களை பற்றிய எத்தகை எண்ணத்தை ஏற்படுத்தும்?? அந்த பெண்களின் ஊர்களில்... அவளுக்கு திருமணம் பார்க்க ஏற்பாடு செய்திருந்த இடங்களில்... நிச்சயம் அவள் மேல் பரிதாபத்தை மட்டும் அல்ல.. எதிர்மறையான எண்ணங்களை கூட ஏற்படுத்தும்... இது பிதற்றலாக கூட இருக்கலாம்.. ஆனால் அத்தகைய பெண்கள் வரும் பகுதிகளை சார்ந்த மக்கள் பெரும்பாலனோர் திரைப்படங்களில் வரும் சம்பவங்கள் உண்மையானவை தான் என்று எண்ணுபவர்கள் ஆகத்தான் இருக்கின்றனர்... இதை நாம் மறுக்க முடியாது.. அங்காடித்தெரு போன்ற படங்கள் அத்தகைய பெண்களின் வாழ்க்கை நிலையை நிச்சயம் உயர்த்த போவதில்லை.. ஆனால் ஒரே ஒரு பெண்ணின் வீட்டில் அவளை பற்றிய தவறான எண்ணத்தை அந்த படம் ஏற்படுத்தினாலும் அது மன்னிக்க முடியாத குற்றம்...

15 comments:

வெங்கட் said...

படம் பார்த்தபின் எனக்குள்
எழுந்த அதே எண்ணத்தை
சிறப்பாக எழுதி இருக்கீங்க..,

ஆனால் என் நண்பர் அக்பர்
எழுதிய விமர்சனத்தையும்
ஒரு முறை படித்துவிடுங்கள்.
http://sinekithan.blogspot.com/2010/04/blog-post.html

பா.வேல்முருகன் said...

உண்மையான கருத்து.

விக்னேஷ்வரி said...

உங்கள் கருத்து முற்றிலும் சரி.

நாடோடித்தோழன் said...

பா.வேல்முருகன்..
உங்கள் வருகைக்கும் ஊக்குவித்தலுக்கும் நன்றி..

நாடோடித்தோழன் said...

விக்னேஷ்வரி..
உங்கள் வருகைக்கும் ஊக்குவித்தலுக்கும் நன்றி.

Unknown said...

உங்கள் வலைதளத்தை மேலும் பிரபலப்படுத்த , மற்றும் அதிக வாசகர்களைப் பெற உங்கள் பதிவுகளை தமிழ்10 .காம் தளத்துடன் இணைத்துக் கொள்ளுங்கள் .

பதிவுகளை இணைக்க இங்கு செல்லவும் 

ஓட்டளிப்புப் பட்டை பெற இங்கு செல்லவும் 

நன்றி
தமிழ்10.காம் குழுவினர்

நாடோடித்தோழன் said...

done

tn38 said...

People watched lots of horrible "LIVE"scenes in the idiot box itself and I do not think this movie will affect one's life personally; Truth is always bitter in taste weather we accept it or not ?!

Saravan

நாடோடித்தோழன் said...

@saravanan@
அத்தகைய கடைகளில் படிப்பறிவில்லாத மக்களின்
பகுதிகளில் இருந்து வரும் பெண்களே பெரும்பாலனோர்..
அவர்களின் மனதில் தேவையில்லாத எண்ணங்களை ஏற்படுத்திவிடும் என்பதே எனது பயம்..
கருத்து தெரிவித்ததற்கு நன்றி..

Senthil said...

Please don't write comments on a really good movie just to be different. Give some credit to the people who worked and directed on that movie. They are not fools. Watch the movie again with open mind. Accept the reality. If possible try to do something for that. Thanks for your time.

Chennai boy said...

வேலைக்கு செல்லும் பெண்கள் வன்முறைக்கு உட்படுத்த படுகிறார்கள் என்பது நிதர்சனம். எல்லா இடங்களிலும் இல்லை. புள்ளிவிபரம் அப்படி சொல்கிறது. அதை பாலீஷாக கண்டு கொள்ளாமல் விட்டுவிட சொல்கிறீர்கள். இத்தகைய உண்மைகள் வெளிவராமல் இருந்தால். இந்த பாலியல் தொல்லைகள் தொடருமே அன்றி ஒழிப்பதற்கு வழியே இல்லை. இந்த படத்தை பார்த்து விட்டு சில இடங்களில் பெண்களை, ’இது வரை நீ வேலை செஞ்சது போதும்’ என்று திரும்ப போய் விட்டார்களாம். சில இடங்களில் சிறுவர்களை வேலையை விட்டு நீக்கி விட்டார்களாம். மூடி மறைப்பதை விட உண்மைகளை வெட்ட வெளிச்சமாக்கி சொல்லி அதை தடுக்கும் வழியை தான் பார்க்கவேண்டுமே தவிர அதை மறைத்து சமூக துரோகிகளுக்கு துணை போக கூடாது.

நாடோடித்தோழன் said...

@ சீனி @
உங்கள் கருத்தை மதிக்கிறேன்.. அது உண்மை எனில்
நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றே நானும் கூறியுள்ளேன்..
ஆனால் சில இடங்களில் தான் அத்தகைய அத்துமீறல்கள் நடைபெறுகின்றது
என்ற அளவிற்காவது காட்சிப்படுத்தியிருக்க வேண்டும் என்பதே எனது எண்ணம்..

நாடோடித்தோழன் said...

@ Senthil @
நிச்சயமாக வசந்தபாலன் அறிவாளி தான்..
சமூக சிந்தனை அவரிடம் அதிகமாகவே உள்ளது..
ஆனால் பின்விளைவுகளையும் அவர் யோசித்திருக்கலாமே..
மனதிற்கு பிடிக்காமல் கட்டாயத்திற்காக பெண்கள் சகித்து கொண்டாலும்,
அதனை கருத்தில் கொள்ளாமல், பெண்களை குறை சொல்லும் சமூகம்
நம்முடையது என்பதை நாம் மறுக்க கூடாது..

"தாரிஸன் " said...

nalla vimarsanam............

Anonymous said...

this is really 100 percent true ..

Post a Comment