ஒன்றரை மாதங்களாக நடந்து கொண்டிருந்த 20-20 போட்டிகள் ஒரு
வழியாக முடிந்து விட்டது.. சென்னை அணி வாகை சூடி விட்டது... நானும் சென்னையை சார்ந்தவன்தான்..ஆனால் சென்னை தோற்றிருக்கலாமே
என்று தோன்றியது.. அதற்கு ஒரே காரணம் சச்சின்..
வழியாக முடிந்து விட்டது.. சென்னை அணி வாகை சூடி விட்டது... நானும் சென்னையை சார்ந்தவன்தான்..ஆனால் சென்னை தோற்றிருக்கலாமே
என்று தோன்றியது.. அதற்கு ஒரே காரணம் சச்சின்..
ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்தி கொண்டிருந்த மும்பை அணி இறுதியிலும்
வென்று விடும் என்றே நினைத்தேன்.. என் மனதினில் கோப்பையை சச்சின்
பெற்றுக்கொண்டு பெருமிதம் பொங்க பரிசளிப்பு விழாவில் ரவிசாஸ்திரியிடம்
தனக்கே உரித்தான மெல்லிய குரலில் பேட்டியளிப்பார் என்றெல்லாம்
கற்பனை செய்து வைத்திருந்தேன்..
வென்று விடும் என்றே நினைத்தேன்.. என் மனதினில் கோப்பையை சச்சின்
பெற்றுக்கொண்டு பெருமிதம் பொங்க பரிசளிப்பு விழாவில் ரவிசாஸ்திரியிடம்
தனக்கே உரித்தான மெல்லிய குரலில் பேட்டியளிப்பார் என்றெல்லாம்
கற்பனை செய்து வைத்திருந்தேன்..
அனைவருமே போட்டியை பார்த்திருப்பீர்கள். எனவே எப்படி சென்னை வென்றது, எப்படி மும்பை தோற்றது என்றெல்லாம் நான் சொல்லிக்கொண்டு இருந்தால் வலது மேற்புறத்தில் இருக்கும் 'X' பொத்தானை அமுக்கிவிடுவீர்கள் என்று நானறிவேன்...
ஆனால் ஏன் சென்னை தோற்று இருக்க வேண்டும் என்று ஒரு சென்னைவாசியான நான் நினைக்க வேண்டும் என்று நீங்கள் கேக்கலாம்.. சென்னை அணி ஒன்றும் சென்னை வீரர்களின் திறமையை கொண்டோ, தமிழக வீரர்களின் திறமையை கொண்டோ, கோப்பையை வென்றிருக்கவில்லை. தோனி, பௌலிங்கர் போன்றோரையே சார்ந்திருந்தது.. தமிழக தொழிலதிபர் வாங்கியதாலேயே,சென்னையின் அணி ஆகிவிடாது.. எனவே சென்னை அணியின் மீது எனக்கு பெரிதாக ஒட்டுதலே இல்லை.. அதுவும் சென்னை அணி எதிர்த்தது சச்சினை... சச்சின் என்றுமே இந்தியர்களின் பிரதிநிதி.. சென்னை அணியா, இந்திய சாதனை மன்னனா என்று வந்ததால், ஒரு இந்தியனாக சச்சினுக்கே எனது ஆதரவு கிட்டியது... சென்னை அணியின் சரிவை கொண்டாடினேன்.. ( ஆனால் கடைசியில் எனது தம்பியிடமும், தந்தையிடமும் மூக்கு உடைபட்டது வேறு விஷயம்.. பரவாயில்லை.. சச்சினுக்க்காகத்தானே... )
சச்சின் எத்தனையோ வெற்றிகளை பெற்றிருக்கலாம்.. ஆனால் இந்த கோப்பை அவருக்கு மிகப்பெரிய பெருமிதத்தை தந்திருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.. ஏனென்றால் அவர் இந்த தடவை,தனது கிரிக்கெட் வாழ்வின் ஒரேயொரு கரும்புள்ளியான 'கேப்டன்'பதவிக்கு லாயக்கில்லாதவர் என்ற கரையை துடைத்து எறியும் வாய்ப்பு பெற்றிருந்தார்..அதுவும் இந்தியாவின் வெற்றிகரமான கேப்டன் தோனியிடம் வெற்றிக் கோப்பையை பறித்து தன்னை சிறந்த அணித்தலைவராகவும் பதிவு செய்திருப்பார்...
தோனிக்கு வாய்த்ததை போன்றதொரு சிறந்த அணி சச்சின் கேப்டன் ஆக இருந்த போது அவருக்கு வாய்க்கவில்லை. ஆனால் கங்குலி போன்றதொரு சிறந்த கேப்டன் உருவாக்கி கொடுத்த அணியை கொண்டு, டோனி பெற்றுக்கொண்டிருக்கும் வெற்றிகள், சச்சினுக்கு நிச்சயமாக அணித்தலைவராக தான் சோபிக்க முடியவில்லை என்ற வருத்தத்தை அடிக்கடி கொடுத்துக் கொண்டிருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை... இந்திய அணியின் வெற்றிகள் சச்சினுக்கு வருத்தம் தருகிறது என்று சொல்லவில்லை... அணித்தலைவராக தோனியின் வெற்றிகள் நிச்சயமாக சச்சினுக்கு வருத்தத்தை தந்திருக்கும்..
ஐ.பி.எல். கோப்பை அந்த வருத்தத்தை நீக்கியிருக்கும்... தோனிக்கு ஐ.பி.எல். லில் கிடைக்கும் வெற்றியும், தோல்வியும் எந்த ஒரு பாதிப்பையும் ஏற்படுத்தாது.. ஏனென்றால் இந்திய அணியின் வெற்றிகரமான கேப்டன் அவர்..ஆனால் சச்சினுக்கு வெற்றி கிடைத்திருந்தால் நிச்சயமாக அவர் தனது நீண்ட நாள் மனப் புழுக்கத்தில் இருந்து விடுதலை பெற்றிருப்பார்.. கோடிக்கணக்கான இந்தியர்களுக்கு சந்தோஷத்தையும் பெருமிதத்தையும் தரும் சச்சின் சந்தோஷப்படவும், பெருமிதப்படவும் வாய்ப்பில்லாமல் போய்விட்டதை எண்ணினால் வருத்தமாக இருக்கிறது..
கோப்பையை வெல்ல தகுதியான அணியும் சச்சினின் அணிதான்.. தோனியின் அதிர்ஷ்டகரமான வெற்றியினை இன்னொருமுறை காண்பதற்காக தான், தனது அணியை தனது சிறப்பான ஆட்டத்தால் இறுதி போட்டிக்கு கொண்டு சென்றோமா என்று கூட சச்சின் நினைத்திருக்கலாம்.. சச்சின் ஒன்றும் பொறாமை குணம் கொண்டவர் இல்லை.. ஆனால் வெற்றிகளின் மேல் ஆசை இல்லாதவர் இல்லை.. அவ்வாறு ஆசை இல்லாதவராக இருந்தால் இத்தனை சாதனைகளை அவர் புரிந்திருக்கவே முடியாது.. இன்னொரு முறை ஒரு அணித்தலைவராக தனது மிகப் பெரிய வெற்றியை சச்சின் பெறுவதுற்கு வாய்ப்பு கிடைக்குமா என்பது மிகப் பெரிய சந்தேகம் தான்.. ஆனால் சந்தேகமே இல்லாத பிரபலமான வாசகம்....
"கிரிக்கெட் ஒரு மதம் என்றால், சச்சின் அதன் ஒரேக் கடவுள்"