Friday, April 09, 2010

ஹிட்லர் - ஒரு சாது, மேதையாகி, மிருகமாய் இறந்த உண்மை..

                 மிகப் பெரிய பொருளாதார நிபுணராக உலக மக்களால் நினைவு கூறப்பட்டிருக்க வேண்டியவர் ஹிட்லர்.. உள்ளிருந்த மிருகம் முழித்து கொண்டதால் கொடூர மிருகமாக அறியப்படுகிறார்.. நிச்சயமாக நான் ஹிட்லரை புகழ்பவனோ, இகழ்பவனோ கிடையாது.. படித்ததை பகிர்ந்திட நினைக்கிறேன்.. 
               சாதுவாக வளர்ந்து, வேலை இல்லாமல் திரிந்து, உருப்படாமல் போக இருந்தவன், முதல் உலக போரின் போது ராணுவத்தில் சேர்ந்து, சிறிய கட்சியில் சேர்ந்து, திறமையால் ஆட்சியை பிடித்து, ஜெர்மனியின் பொருளாதார தரத்தை உயர்த்திய மேதையாக திகழ்ந்ததும், உள்ளிருந்த மிருகம் விழித்து கொண்ட காரணத்தால் கொடூர மனித வேட்டையாடும் ஓநாயாக மாறி, போரில் தோற்று , கடைசியில் மனநிலை பாதிக்க பட்டவனாக மற்றவர்களால் பரிதாபமாக பார்க்கப்பட்டு, மனம் திருந்தாமலேயே காதலியுடன் உயிரை மாய்த்துக் கொண்டது, யாராலும் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத ஒன்றாகும்.. 
          சமீபத்தில் ஹிட்லரை பற்றிய சில துணுக்குகளை மதனின்(கார்டூனிஸ்ட்) 'மனிதனுக்குள்ளே மிருகம்' என்ற நூலில் படித்தேன்.. மேலே கூறியது நான் படித்ததின் சுருக்கம்.. விரிவாக பகிர்ந்து கொள்ள எனக்கு ஆசை.. தொடர்ந்திடலாமா என உங்களின் கருத்தை கேட்கிறேன்...

6 comments:

ஜெகதீஸ்வரன் said...

பகிருங்கள்,.. தயக்கம் வேண்டாம்.

ஹிட்லருக்கும் காந்திக்கும் இருக்கும் ஒற்றுமையை எனது வலைப்பூவில் தொகுத்தேன். மக்கள் விரும்பினார்கள்.

ஹிட்லரை மிருகம் என்று பயந்து ஓடுவோர்கள் பலர். ஆனால் அவர் திறமையை வியந்து போற்றுபவன் நான்.

Anonymous said...

Of course pls continue. your info throws light on different dimension of Hitler who is being remembered only for his cruelty and not for any other virtues....

பாலா said...

carry on

Prathap Kumar S. said...

தொடருங்கள்...அறிய ஆவல்...

நாடோடித்தோழன் said...

@ ஜெகதீஸ்வரன் @
உங்கள் ஊக்குவித்தலுக்கு நன்றி.. தொடர்கிறேன்..

நாடோடித்தோழன் said...

@ பாலா @
@ நாஞ்சில் பிரதாப் @

நிச்சயம் தொடர்கிறேன்..
பிழை இருந்தால் திருத்துங்கள்..
உங்களுக்கு தெரிந்தததையும் பகிருங்கள்..

Post a Comment