Saturday, May 01, 2010

ஹிட்லர் - பாகம் 3 - மாபெரும் சாதனையாளர்..

            
ஒரு மனிதன் செய்த தவறுகளையே முன்னிலைப் படுத்தி அவனின் சாதனைகளை மறந்திடுவது நமது இயல்பு... இது அன்றாட வாழ்வில் நாம் அனைவரும் செய்யும் தவறுதான்.. ஹிட்லர் பெரிய தவறுகளை செய்திருந்த போதிலும் அவர் மிகப் பெரிய சாதனைகளுக்கும் சொந்தக்காரர். அவை முழுமையாக மறைக்கப்பட்டுவிட்டது..

                 சர்வதிகாரிகளின் ஆட்சிக் காலத்தில் ஆபாச அத்துமீறல்கள் அதிகமாகவே இருக்கும்.. ஆனால் ஹிட்லர் அத்தகைய ஆபாசங்களை ஒருபோதும் அனுமதிக்கவில்லை.. ஒரு விபசார விடுதி கூட அவரின் ஆட்சிக்காலத்தில் இல்லை என்பதே மிகப் பெரிய சாதனை அல்லவா... "விபச்சாரம் பிளேக் நோய் போன்றது. சிறிதும் தயவு காட்டாமல் அது அழிக்கப்பட வேண்டும். சமுதாயத்தின் அழுகிப் போன பகுதிகளை நாம் சுத்தப்படுத்த வேண்டும். இலக்கியம், சினிமா, கலை, பத்திரிக்கைகள், சுவரொட்டிகள், கடைகளின் 'ஷோகேஸ்'கள் அதிலும் ஆபாசம் இருக்க, நான் அனுமதிக்க மாட்டேன்!", என்று எச்சரித்தார் ஹிட்லர்.
         
        வெள்ளைத்துணியில் உள்ள கறுப்புக் கரைகளே நம் கண்களை ஈர்க்கும்..அதே போன்று,ஹிட்லரின் தவறுகளால்,அவரை பற்றிய நினைவுகள் உலக சமுதாயத்தால் ஒதுக்கப்பட்ட போது,அவரின் சாதனைகளும் கூடவே மறக்கப்பட்டுவிட்டன.

         1035 பக்கங்கள் கொண்ட 'அடால்ப் ஹிட்லர்'என்ற புத்தகத்தை எழுதிய பேராசிரியர் ஜான் டோலேன்ட்,"ஹிட்லர் ஆட்சிக்கு வந்த நாலாவது ஆண்டில் எதாவது காரணத்தால் இறந்திருந்தால், உலகமே ஹிட்லரை 'ஜெர்மனியின் சரித்தரத்தில் தோன்றிய மிகச் சிறந்த மாமனிதன் என்று பாராட்டியிருக்கும்!" என்று கூறுகிறார். அவரின் சாதனைகளில் சிலவற்றை பார்ப்போம்.

        முதல் உலகப்போரால் வாடி வதங்கி போயிருந்த ஜெர்மனியின் பொருளாதாரத்தை ஆட்சிக்கு வந்த மூன்றே ஆண்டுகளில் தூக்கி நிறுத்தியவர் ஹிட்லர். ஹிட்லர் பதவியேற்ற 1933 -இல் ஜெர்மனியில் வேலை இல்லாதவர்களின் எண்ணிக்கை 60 லட்சம். ஆனால் 1936 -இல், அதாவது மூன்றே ஆண்டுகளில், ஜெர்மனியில் வேலையில்லாதவர் என்று ஒருவர் கூட இல்லை என்ற நிலை உருவானது.. இத்தனைக்கும் பொருளாதார அறிவு சிறிதும் ஹிட்லருக்கு இல்லை. இந்த சாதனைக்கு காரணம், ஹிட்லரால் தேடிக் கண்டுப்பிடிக்கப்பட்ட ஜால்மர் ஷ்ஹாக்ட் என்ற பொருளாதார ஜீனியஸ் ஆவார். ஜால்மர் ஷ்ஹாக்ட் ஒன்றும் முன்னணித் தலைவரில்லை.. ஆயினும் அவரது திறமையை உணர்ந்திருந்த ஹிட்லர் அவரை பொருளாதார அமைச்சராக நியமித்து இத்தகைய சாதனையை புரிந்தார். ( திறமைக்கு மரியாதை கொடுத்து பதவியை கொடுப்பவனே சிறந்த தலைவன். நமக்கு எப்போது அத்தகைய தலைவன் கிடைப்பான் என்று யூகிக்க கூட முடியவில்லை.)

       ஹிட்லரின் ஆட்சியில் வேலைக்கேற்ற ஊதியம், போனஸ், விலைவாசி எல்லாம் கட்சிதமாக நிர்ணயிக்கப்பட்டது. படு வேகமாக கார்கள் போவதற்கு மிக நீண்ட 'ஹைவேஸ்' (Auto Bahn ) உலகில் முதலில் கட்டப்பட்டது, ஜெர்மனியில் ஹிட்லரின் ஆட்சிக்காலத்தில்தான்..

        முதியவர்களுக்கு பென்ஷன் மற்றும் இலவச வைத்தியம், எல்லோருக்கும் ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டங்கள் எல்லாம் படுவேகமாக நடைமுறைக்கு வந்தன.

        "சாமான்யர்களும் காரில் பயணிக்க வேண்டும். அவர்களுடைய பட்ஜெட்டுக்கு ஏற்றவாறு கார்கள் தயாரிக்கப்பட வேண்டும்.ஒரு காலன் பெட்ரோலுக்கு அது நாற்பது மைல் போக வேண்டும்" என்று Porsche கார் நிறுவனத்தின் அதிபர் 'பெர்டினான்ட் பொர்ஷ்'-ஐ கூப்பிட்டு சொன்னார் ஹிட்லர். பின் பகுதியில் இஞ்சின் அமைப்புடன் தயாரிக்கப்பட்ட அந்த மினி கார்களுக்கு 'வோக்ஸ்வேகன்' என்று பெயரிடப்பட்டது. பிற்காலத்தில் அந்தக் கார்கள் உலகப் புகழ் பெற்றது.

      'தொழிற்சாலைகளால் சுற்றுச்சூழல் மாசு அடையக் கூடாது' அன்று ஹிட்லர் சட்டம் கொண்டுவர, அத்தனை தொழிற்ச்சாலைகளும் அதற்கான Anti - Pollution சாதனங்களையும் ஃபில்டர்களையும் பொருத்திக் கொண்டது. அதனால் ஜெர்மனியில் ஓடிய நதிகள் அத்தனையும் படு சுத்தமாக இருந்தது.

     ஹிட்லர் காலத்தில் எந்த தொழிற்ச்சாலையிலும் சம்பளப் பிரச்னை, வேலைநிறுத்தம் என்பதெல்லாம் கிடையவே கிடையாது. முதலாளி பக்கமும் அவர் செயவில்லை. தொழிற்ச் சங்கங்களுக்கும் அவர் ஆதரவு தரவில்லை. முதலாளி பிரச்னை செய்தாலும், தொழிலாளிகள் தவறு செய்தாலும், இரு தரப்பினரையும் சிறையில் தள்ளினார். 

          சர்வாதிகாரியாக இருந்தததால் ஹிட்லரால் இந்தக் கண்டிப்பைச் சுலபமாக காட்டி, பிரச்னையை முடிக்க முடிந்ததது என்பதும் உண்மைதான். (அதனால்தான் என்னவோ சர்வதிகாரிகளின் ஆட்சிக்கு ஆதரவு தருவோர்களும் பலர் உண்டு.)

       ஹிட்லர் ஆட்சிப் பொறுப்பை ஏற்றப் போது, ஜெர்மனியின் ராணுவ வீரர்களின் மொத்த எண்ணிக்கை சுமார் ஒரு லட்சம் தான். அப்போது, உருப்படியான, நவீனரகத் துப்பாகிகள் கூட ராணுவத்தில் கிடையாது. ஆனால் ஹிட்லர் ஆட்சியேற்ற நான்கே ஆண்டுகளில் ஐரோப்பாவின் மிகப் பிரம்மண்டாமான 'ஆர்மி'யாக அது மாறியது. 'நவீன போர் விமானங்கள், பீரங்கிகள், துப்பாக்கிகள், டாங்கிகள் கொண்ட அசுர சக்தியாக ஜெர்மனியின் ராணுவம் மாறிய வேகம், உலக வரலாற்றிலேயே அதுவரை நிகழ்ந்திடாத பெரிய ஆச்சரியம்' என்று உலகப் பெரும் ராணுவ ஆராய்ச்சியாளர்கள் இன்னும் வியந்துக் கொண்டிருக்கிறார்கள்.

         ஹிட்லரின் மொத்த பன்னிரண்டு கால ஆட்சிக் காலத்தை பார்த்தால் அவரின் தவறுகளே நம் கண் முன்னே விரிந்திருக்கும். ஆனால் அவரின் முதல் ஐந்தாண்டு கால சாதனைகள் மகத்தானவை.

         இப்படி பல சாதனைகள் மூலம், அநேகமாகக் கடவுளுக்கு இணையாக ஜெர்மன் மக்களால் போற்றப் படும் நிலையை ஹிட்லர் நெருங்கிய சமயத்தில், அவர் அடியோடு கொலைகாரச் சர்வாதிகாரியாக மாறி, வெறியாட்டம் போட்டு, பிறகு ஒரேயடியாக வீழ்ச்சியின் விளிம்புக்கு போனது உலக வரலாற்றுச் சோகம். அவரின் பிற்பாதி கொடூர சர்வாதிகார ஆட்சியை பற்றி அடுத்த பதிவில் காண்போம்.

(பின் குறிப்பு : ஹிட்லரின் மிகப் பெரிய தவறுகள் பலருக்கும் தெரிந்திருக்கும். பெரும்பாலானோர் அறிந்திருக்கின்ற காரணத்தால் சுருக்கமாக சொல்லி அடுத்த பதிவுடன் முடிக்க நினைக்கின்றேன். ஆனால் சிறிது விரிவாக தெரிந்து கொள்ள விரும்பினால் எனக்கு தெரியப் படுத்துங்கள்..விவரிக்கிறேன்.. உங்கள் ஓட்டுக்கள் பலரை இந்த பதிவு சென்றடைய உதவி புரியும்.. நன்றி..)




    

21 comments:

Aba said...

அற்புதமான பதிவு... ஹிட்லரைப் பற்றிய நெகடிவ் இமேஜை என்னுள்ளே அடியோடு மாற்றியது இந்தப் பதிவுதான் மிக்க நன்றி..

வாழ்த்துக்கள்...

தேசாந்திரி-பழமை விரும்பி said...

ஹ்ம்ம்... கலக்குங்கள்... :)

Jagadeeswaran said...

wow HITLER@@@

Anonymous said...

pls change the taj photo to thenjore temple!.

because taj is only build up on this century. But tanjure in 1000 years ago.

be proud in tamil nadu?.

i think u understand!

Anonymous said...

It would be great if you could publish the remaining articles in detail...

நாடோடித்தோழன் said...

@@Abarajithan said...
//ஹிட்லரைப் பற்றிய நெகடிவ் இமேஜை...//

கொடூர குணம் கொண்ட மனிதர்களிடம் கூட நிறைய கற்பதற்கு உண்டு.. எனவே தான் இந்த சிறிய முயற்சி. வருகைக்கு நன்றி..
---------------------------------------------------------
@@தேசாந்திரி said...
//ஹ்ம்ம்... கலக்குங்கள்...//

நன்றி நண்பா.. நான் பதிவுலகத்திற்கு வர நீங்கள் முக்கிய காரணம்..
---------------------------------------------------------
@@Jagadeeswaran said...
// wow HITLER@@@ //

ya.. ya... வருகைக்கு நன்றி..
---------------------------------------------------------
@@sagotharan said...
//pls change the taj photo to thenjore temple!//

கூடிய சீக்கிரம் முயற்சி செய்கிறேன்.. வருகைக்கு நன்றி..
---------------------------------------------------------
@@Anonymous said...
//It would be great if you //

நிச்சயமாக நண்பரே... வருகைக்கு நன்றி..

திருஷ் said...

திறமையான ஒரு தொடர். ஹிட்லர் ஒரு மாமனிதன் என்றே கூறலாம். ஒரு தனி மனிதன் பின் ஆயிரமாயிரம் படையணிகளும், மக்கள் பலமும் கூடவே இருந்தது. அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் காரர்கலால் அவர் ஒரு சர்வாதிகாரியாக ஒரு தோற்றப்பாட்டை எற்படுத்திவிட்டார்கள். வாழ்த்துக்கள்.

நாடோடித்தோழன் said...

@@திருஷ் said...

நண்பரே.. நானும் அவரின் சர்வதிகார போக்கினையே
வரும் பதிவுகளில் கூறப் போகிறேன்.. ஆனால் நீங்கள் சொல்வதை பார்த்தால் சர்வாதிகாரிப் பட்டமே
எதிரிகள் அவருக்கு சூட்டியதை போன்று தோன்றுகிறது..முடிந்தால் விளக்க முடியுமா.. ஏனெனில் எனக்கு தெரியாததை நீங்கள் தெரிந்திருக்கலாம்.. வருகைக்கு நன்றி..

vinoth said...

Excellent coverage.Please show the brief story.
I want to know this.Because upto now i thinks the Hitler is a bad man.But he had the another kind of excellency behind him.So many thanks to you my friend.
Please send me a pdf Or some readable copy of your source for my backup.
Thanks.

அய்யம்பாளையம் வெங்கடேஸ்வரன் said...

நாடோடித் தோழரே!

நல்லதொரு பதிவு!

இந்திய வரலாற்றை பார்த்தோமானால் ஹிட்லர் ஒரு ஹீரோவாக போற்றப்பட வேண்டியவர். ஆங்கில வந்தேறிகளை எதிர்க்க நேதாஜியின் இந்திய தேசிய இராணுவத்திற்கு உதவியது முதல் வீரன் செண்பகராமன் ஆங்கில ஆதிக்கத்தில் இருந்த சென்னையின் மீது குண்டு வீசி தாக்குதல் நடத்த துணை புரிந்தது வரை எத்தனையோ வழிகளில் ஹிட்லர் இந்திய விடுதலைக்கு உதவியுள்ளார்.

இரண்டாம் உலகப்போரில் ஜப்பான் அமெரிக்காவின் அணுகுண்டாலும், ஜெர்மனி ரஷ்யாவின் மீது தவறான ஒரு பருவகாலத்தில் தாக்குதல் நடத்தியதாலும் தோற்கடிக்கப்பட்டது. இங்குதான் இந்தியாவின் துரதிஷ்டம் பல்லை இளித்தது.

ஜெர்மனியையும், ஜப்பானையும் நம்பி இந்தியாவின் வடகிழக்கு பகுதிகளில் முன்னேறி கெர்ண்டிருந்த நேதாஜின் படைகள் பலத்த தோல்வியை சந்தித்தன. நேதாஜியும் விமான விபத்தில் 'கொல்ல'ப்பட்டார்.

ஊசி தங்கம் என்பதற்காக அதனை வயிற்றில் குத்திக் கொள்ளும் மேல்தட்டு மேதாவி அரசியல்வாதிகள் இந்திய தலையெழுத்தை நிர்ணயிக்கும் நிலைக்கு வந்தனர்.

அடிமைப்படுத்திய ஆங்கிலேயன் ஹீரோவாகவும், விடுதலைக்கு உதவிய ஹிட்லர் முதலானவர்கள் வில்லன்களாக இந்திய வரலாற்றில் புனையப்பட்டனர்.

யூதர்கள் விடயத்தில் ஹிட்லர் தவறு செய்திருக்கலாம். ஆனால், முதல் உலகப்போரின் முடிவில் ஏற்பட்ட வெர்சல்ஸ் உடன்படிக்கையில் ஜெர்மனி எப்படி வஞ்சிக்ப்பட்டது என்பதை அறிந்தால் ஹிட்லரின் போர்க்குணத்தின் காரணம் புரியும்.

வரலாற்றை பார்த்தோமானால்-அளவுக்கு மீறி ஒரு இனம் மற்ற இனத்தால் இம்சிக்கப்படும் போது இம்சிக்கப்படும் இனம் மனித நேயத்தை மறந்து பதிலடியில் இறங்குவது தவிர்க்கஇயலாத ஒரு துயரம் என்பதை மறுக்க இயலாது.

இந்திய விடுதலைபோர் நடந்த காலத்தில் ஜெர்மனியை ஒதுக்கி வைத்து ஏமாந்து போன இந்திய மேதாவிகள் தான் இந்திய சுதந்திரம் அடைந்த பிறகு யூதர்களின் இஸ்ரேலை ஒதுக்கி வைத்து மீண்டும் ஒருமுறை தங்க ஊசியை வயிற்றில் குத்திக் கொண்டார்கள்.

எதிரிக்கு எதிரி நண்பன் என்ற அடிப்படை அரசியல் கோட்பாட்டை தந்த சாணக்கியன் பிறந்த நாடுதான் இந்தியா. ஆனால் நண்பன் யார் எதிரி யார் என்றே தெரியாத நிலையில் இந்தியாவின் வல்லரசு கனவு சற்றே அதிகம் தான்!

உங்களின் பார்வைக்கு:

http://mokkaicomics.blogspot.com/2010/04/blog-post_20.html

அய்யம்பாளையம் வெங்கடேஸ்வரன் said...

நாடோடித் தோழரே!

//pls change the taj photo to thenjore temple!//

வழி மொழிகிறேன்! தாஜ்மகால் சில பல மேல்தட்டு மேதாவிகளால் இந்தியாவின் அடையாளச்சின்னமாக்கப்பட்டது ஒரு சோகமே! இஸ்லாமியர்கள் அதனை துதிப்பதில்லை.

நாடோடித்தோழன் said...

@@sagotharan said...
//pls change the taj photo to thenjore temple!//

@@அய்யம்பாளையம் வெங்கடேஸ்வரன் said...
//வழி மொழிகிறேன்!//

தங்களின் விருப்பபடியும் எனது மகிழ்ச்சிக்காகவும் தஞ்சை கோவிலாக மாற்றிவிட்டேன்.. எனது ஏனைய மதத்தின் சகோதரர்களே.. தஞ்சை கோவிலை தமிழர்களின் அடையாளச் சின்னமாகவே பார்த்திட வேண்டுகிறேன்.. மதத்தின் அடையாளமாக பார்க்க வேண்டாம் என்று வேண்டுகிறேன்....

நாடோடித்தோழன் said...

@@அய்யம்பாளையம் வெங்கடேஸ்வரன் said...
நீங்கள் எனக்கு ஹிட்லரை பற்றிய புதிய புரிந்துணர்தலை ஏற்படுத்தியிருக்கிறீர்கள்.. வருகைக்கும் நண்பராக இணைந்ததற்கும் நன்றி நண்பரே..

நாடோடித்தோழன் said...

@@vinoth said...
//Excellent coverage.Please show the brief story.//

நன்றி வினோத் அவர்களே.. விரிவாகவே தருகிறேன்.. நீங்கள் கூறியவாறு தர முயற்சிக்கிறேன்.. வருகைக்கு நன்றி..

CM ரகு said...

good work.
i want to know the reason behind the change of attitude of Hitler.
how a good ruler became such a cruel person in the history?
pls try to give reason behind the hate for jews and cause of 2nd world war.
thank you

CM ரகு said...

pls specify some references for (historical) facts, then only it will be easy to quote your article in arguments in future.
thank you

நாடோடித்தோழன் said...

@@CM ரகு said...
//pls specify some references for (historical) facts//
நீங்கள் கூறியவாறு தர நிச்சயம் முயற்சி செய்கிறேன்.. வருகைக்கு நன்றி நண்பரே..

அருணாச்சலம் மகராஜன் said...

ஹிட்லர் பற்றிய உங்கள் பதிவு அருமை... அவரின் சாதனைகளை இன்னும் கொஞ்சம் விவரமாக சொல்லுங்கள்... அவரின் மிருகத்தனங்களை பற்றி நாம் எல்லோருமே அறிவோம்... அவருக்குள் இருந்த ஒரு நல்ல தலைவனை இன்னும் கொஞ்சம் அருகாமையில் சென்று பார்க்க வேண்டும் என்று தோன்றுகிறது.

மனோதத்துவ ரீதியாக அவர் சிறு வயதில் அனுபவித்த கொடுமைகளின் ஒரு வடிகாலாகவே அவர் கொடூர முகம் வெளிப்பட்டு இருக்க வேண்டும்... வெர்செயில்ஸ் உடன்படிக்கை ஜெர்மனியை அவமானப் படுத்தியாது... பொருளாதரத்தில் சுரண்டியது என்பது எல்ல்லாம் உண்மையே... ஒரு தர்க்க ரீதியாக செயல்பட முடிகின்ற ஒரு தலைவனால் நாட்டை முன்னேற்றுவது பற்றி மட்டுமே யோசித்து இருக்க முடியும்... மட்டுமல்லாமல் இதற்கு முன்பு நடந்த தவறுகளை திருப்பி செய்யாமல் இருக்கவும் முடிந்து இருக்கும்... இரண்டாம் உலகப்போருக்குப்பின் ஜப்பான் அதைத் தான் செய்தது.... ஹிட்லரும் முதல் நான்காண்டுகள் அதைத்தான் செய்தார்... அதன் பிறகு நடந்ததை தான் உலகமே அறியுமே... அந்த கொடூர தனங்களுக்கு எல்லாம் காரணம் அவரின் சிதைந்த இளமைப் பருவம் தான்...

ஹிட்லரைப் பற்றி குறை சொல்பவர்கள் அனைவருக்கும் ஒன்று சொல்ல விழைகிறேன்... நம்மில் எத்தனை பேர் அதிகாரமும் படை பலமும் கையில் இருக்கும் போது ஹிட்லர் மாதிரியான கொடூரங்களை அரங்கேற்றாமல் இருக்க முடியும்.... அதுவும் ஒரு சிதைந்து போன இளமைப் பருவத்தை வைத்துக்கொண்டு.... சமீபத்தில் இலங்கையில் இந்திய உதவியுடன் நடந்தவையும் இதே போன்றதொரு நிகழ்வு தான்... அதனால் தான் எனக்கு மட்டும் இல்லை, யாருக்குமே ஹிட்லரரின் மறுபக்கத்தைப் பற்றி அவ்வளவாக தெரிந்து கொள்ள தோன்றவில்லை. அவரை அவரின் சிறந்த செயல்களுக்காக ஒரு 'hero' வாகவும் பார்க்க இயலவில்லை....

ஆகையால் நண்பர் நாடோடி தோழரே இன்னும் சிறிது விலாவாரியாக ஹிட்லரின் ஆளுமையை பதிவு செய்யுங்கள்...

Unknown said...

SAHA


ITS TOO GOOD AND EXCELENT

Yazhini said...

IT IS REALLY SURPRISING TO KNOW THAT HITLER WAS INDEED A VERY GOOD RULER. IN OUR GENERATION, WE ARE TAUGHT THAT HITLER IS A PSYCHO SADIST CHARACTER AND HE IS REFERRED TO SUC PEOPLE INSTANTLY.

NADODI THOZHA, THANX FOR TAKING THIS SENSITIVE TOPIC AND EDUCATING US ABOUT HITLER AND THIS HAS REALLY PUT LIGHT ON ME TO READ THE BIOGRAPHY OF PEOPLE BEFORE COMMENTING OR CRITICISING ANYONE.

THANX FOR UR AWESOME WORK FRIEND. KEEP IT UP.

Anonymous said...

வணக்கம்,
உலகிலுள்ள ஹிட்லரின் பக்தர்களில் நானும் ஒருவன். தங்களின் இந்த கட்டுரைக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள்.

நன்றி

Post a Comment