Saturday, October 08, 2011

ஹிட்லர் - பாகம் 5 - தொடரும் சாதனைகள்...

                


        சாதனைகளின் நாயகனாகவே ஹிட்லர் விளங்கியிருக்கிறார் என்றால் அது மிகை இல்லை. எதிரிகளால் அவரின் சாதனைகள் மறைக்கப்பட்டு தவறுகள் பெரிதுப்படுத்தி காட்டப்பட்டது என்ற ஹிட்லர் ஆதரவாளர்களின் கருத்தும் மறுக்கப்படுவதற்கு  இல்லை. நான் படித்த கட்டுரையில் அவரின் சாதனைகள் ஒரு அத்தியாயம் தான் இருந்தது. அவரின் தவறுகளே பல அத்தியாயங்களை கொண்டிருக்கின்றது. எனவே நண்பர்களின் விருப்பத்திற்காக மற்ற படைப்புகளில் இருந்து சேகரித்து இந்தப் பதிவினில் தருகின்றேன்.


   ஹிட்லர் தனது 17-வது வயதில், பள்ளி இறுதித் தேர்வில் தேறினார். அதற்காகக் கொடுத்த சான்றிதழை வாங்கிக்கொண்டு வருகிற வழியில் நண்பர்களோடு சேர்ந்து மது அருந்தி, போதையில்  சர்டிபிகேட்டைக் கிழித்தெறிந்தார். இதை அறிந்த ஆசிரியர், அவரைக்கூப்பிட்டுக் கண்டித்தார். தவறை உணர்ந்த ஹிட்லர் "இனி என் வாழ்நாளில் சிகரெட்டையும், மதுவையும் தொடமாட்டேன்" என்று சபதம் செய்தாராம். அதன்படி, கடைசி மூச்சு உள்ளவரை சிகரெட்டையும், மதுவையும் அவர் தொடவே இல்லை. 



             பல வலி நிவாரணிகளும், போதைப் பொருள் பழக்கத்தில் இருந்து வெளிவர  உதவும் மருந்துகளும், ஹிட்லர்- இன் கடும் முயற்சியால் கண்டுப் பிடிக்கப்பட்டன. ஹைபோதேர்மியா என்னும் உடல் வெப்பத்தை குறைத்திடும் ஒரு நோயிற்கு தீர்வைக் கண்டது ஹிட்லர்-இன் ஜெர்மனிய மருத்துவர்கள் தான். இவ்வாறு மருத்துவத்துறையில் வியத்தகு முன்னேற்றம் அடைந்தது ஜெர்மனி.


             பெண்களுக்கு ராணுவத்தில் பலப் பணிகளில் இடம் தந்து பெண்ணுரிமை காப்பதில் தலை சிறந்து விளங்கினார்.  பெண்களை எப்போதும் தாழ்வாக நினைத்தது இல்லை ஹிட்லர். இப்போதுள்ள மிருகவதை தடுப்பு சட்டத்தை அமல்படுத்துவதில் முன்னோடியாக திகழ்ந்தவர் ஹிட்லர். தன் தாயிடமும், மனைவியிடமும், குழந்தைகளிடமும் அன்புக் காட்டும் மனிதராக திகழ்ந்தார். குழந்தைகளுக்கு பிடித்த மனிதராக திகழ்ந்தார் ஹிட்லர்.


               பல எதிரி நாடுகளை, கத்தியும் இன்றி, உயிர் சேதமும் இன்றி, தனது சமயோசிதப் புத்தியாலும், தந்திரத்தாலும் வெற்றிக் கொண்டவர் ஹிட்லர். அதற்கு அவரின் குறுக்கு புத்தியும், எதிரியை கணித்திடும் ஆற்றலும் பெரிதும் உதவி செய்தன.


              ஹிட்லர்-இன் காலத்தில் அவரின் பெரும் முயற்சியால் ஜெர்மனி ராணுவத் தொழில்நுட்பத்திலும் விஞ்ஞானத்திலும் மிகப் பெரிய முன்னேற்றம் அடைந்திருந்தது. போரில் ஜெர்மனி தோல்வியடைந்த பின் ஜெர்மனியின் ராணுவத்தொழில்நுட்ப வல்லுனர்களையும், விஞ்ஞானிகளையும், அமெரிக்கர்களும் ரஷ்யர்களும் பங்குப் போட்டு பிரித்துக் கொண்டனர். அவர்களே இப்போதைய 'நாசா' வின் இத்தகைய வளர்ச்சிக்கு காரணமாக இருந்தனர் எனக் கூறுவோரும் உளர்.


              ஒரு தலைவனின் கடமை நாட்டின் பொருளாதாரத்தை 
உயர்த்துவதும், வேலையில்லாமையை ஒழிப்பதும், இந்நாட்டை சேர்ந்தவன் நான் என்று பெருமிதமாக கூறிகொள்ளும் நிலைமையை உருவாக்குவதுவுமே ஆகும். ஹிட்லர் தனது ஆட்சிக் காலத்தில் அத்தகைய தலைவனாக திகழ்ந்தார் என்பதில் சந்தேகமே இல்லை.




            

Saturday, December 25, 2010

ஹிட்லர் பாகம் - 4 -சுட்டுத் தள்ளுங்கள் நாய்களை..

ஹிட்லர் பற்றிய முந்தைய பதிவுகளில் படித்தவர்க்கு ஹிட்லரின் புத்திசாலித்தனம் ஓரளவுக்கு புரிந்திருக்கும.



ஒரு புத்திசாலி சாடிஸ்ட் ஆக மாறினால் மிகவும் ஆபத்தான ஒன்றுதான். ஆனால் ஹிட்லர் என்னும் சாதனையாளன் செய்த சாதனை என்ன தெரியுமா.. 'ஜெர்மனி' என்ற ஓர் நாட்டையே 'சாடிஸ்ட் நாடு' ஆக மாற்றினான் என்றால் அது மிகையில்லை..


அரசு அதிகாரிகள் யாவரும் மனிதாபிமானம், இரக்கம், குற்ற உணர்வு யாவும் மறந்து மிருகங்களாக, கொலைக் கருவியாக மாறி மும்முரமாக இயங்கினார்கள். யூதர்களை அழித்தொழிக்கும் இலாகாவிற்கு தலைவராக பணியாற்றிய 'ஐக்மன்' பின்னாளில் கைது செய்யப்பட்டபோது நிருபர்களிடம் கூறியது என்ன தெரியுமா.. ' ஐம்பது லட்சம் யூதர்களை நாங்கள் கொலை செய்தபோது, இனம்புரியாத ஆழ்ந்த திருப்தி ஏற்பட்டது. மரணதண்டனை கொடுத்தாலும் விஷப் பூச்சிகளை ஒலித்துக் கட்டிய திருப்தியோடு செத்துப் போவேன்' என்றானாம்.. இவ்வாறு பலர் ஹிட்லரை கண்மூடித்தனமாக நம்பினார்கள். நாஜி அதிகாரிகள், 'விஷவாயுக் குளியலறைகளை' சொர்கத்தின் பாதை என்று வர்ணித்தனர். ஒவ்வொரு ஆயிரம் யூதர்களை கொன்றபின்னரும் 'அறுவடை திருவிழா' என்ற பெயரில் ஷாம்பெயின் பாட்டில்களுடன் கொண்டாடினார்கள் அரசு அதிகாரிகள். யூதர்களை நிற்க வைத்து நெற்றியில் சுட்டால் பரிசு என்கிற ரீதியில் 'துப்பாக்கி சுடும் போட்டி' கூட நடத்தினார்கள், கொலை செய்வதில் புதுமையை விரும்பிய சில அதிகாரிகள்.


இறந்தவர்களின் பற்கள், எலும்புகள் துகள்கள் ஆக்கப்பட்டு நாஜிகளால் உரமாகவும், சிமெண்ட் கலவையோடு கலக்க பட்டு, நடைபாதைகள் அமைக்கவும் பயன் படுத்தப்பட்டன.


'யூதர்கள் மனிதர்கள் அல்ல.. அழிக்கப் படவேண்டிய விலங்கினங்கள்! ' என்று அதிகாரிகள் மூளைச் சலவை செய்யப்பட்டிருந்தனர். 'ஆடு மாடுகளின் தோலைக் கொண்டு பைகள் செய்வதைப் போன்ற ஒரு செயல் தான் இதுவும்' என எல்லோரும் நம்பினார்கள். இரும்பு இதயத்துடன் செயல் படுவது பெருமையான விஷயம் என்று அதிகாரிகளுக்கு திரும்ப திரும்ப ஹிட்லரால் எடுத்து சொல்லப்பட்டது.


ஒருமுறை அனைத்து அதிகாரிகளையும் தங்கள் செல்ல நாய்களை கூட்டி வரச்செய்தார் ஹிட்லர். அவற்றை தன் கைகளால் சுட்டுத் தள்ளவேண்டும் என்று அந்த அதிகாரிகளுக்கு ஆணையிட்டார். காரணம், 'weakness' என்பதே கூடாது என்பது தான் நாஜி தத்துவமாம். இத்தனையும் மீறி பல அதிகாரிகள் குற்ற உணர்வினால் அவதிப்
 பட்டார்கள் என்பதும் உண்மை.


நியாயம் - அநியாயம் பற்றிய சுய நினைவோடு, பகுத்தறிவோடு எடை போடும்போது தான், மிருகத்தன்மை அகன்று, 'மனிதன்' தலை எடுக்கிறான்! அப்படி ஓர் சம்பவமும் ஆவ்ச்விட்ஸ் சிறைச் சாலையில் நிகழ்ந்தது. விஷவாயு செலுத்தப் பட்டு இறந்துப் போன ஆயிரக் கணக்கானவர்களின் உடல்களை நாஜி அதிகாரிகள் அப்புறப்படுத்தினார்கள். அப்போது 'Gas Chamber' இல் பல உடல்களுக்குக் கீழே பதினாலு வயதுப் பெண் கிடந்தாள், உயிரோடு.
பல உடல்கள் அவள் மேல் விழுந்து, விஷவாயு வீச்சிலிருந்து அவளைக் காப்பாற்றி இருக்க வேண்டும். உடனே அதிகாரிகள் பரபரப்பு அடைந்தனர். ஒருவர் தேனீர் தயாரித்துக் கொண்டு வந்தார். பிறந்த மேனியோடு கிடந்த அந்த பெண்ணை தூக்கிவந்து, போர்வையால் ஆதரவோடு மூடினார் ஒருவர். சரேலென்று அனைவரிடமும் ஒரு மாற்றம். மிருகம் அழிந்து மனிதம் துளிர்த்தது. அந்தப் பெண்ணை தங்கள் குழந்தை போல் பாவித்து சிலர் கண் கலங்கினார்கள். அப்போது அங்கே நுழைந்தார், சிறைச் சாலையின் தலைவர் மஸ்பெல்டு.


விஷயத்தை  மற்றவர்கள் விவரிக்க, நடுங்கியவாறு அமர்ந்திருந்த பெண்ணைப் பல நிமிடங்கள் தீர்க்கமாகப் பார்த்தார். அவரது உதடுகள் லேசாகத் துடித்தன.  விரல்கள் நடுங்க, கைத்துப்பாக்கியை எடுத்து, எல்லோரும் வேண்டாம் வேண்டாம் எனக் கெஞ்சியதை காதில் வாங்காமல், அந்தப் பெண்ணை நெற்றிப் பொட்டில் சுட்டுக் கொன்றார். கொன்றதும் அவர்க் கூறியது  என்ன தெரியுமா..
'இந்தத் தகவல் தெரிந்தால் தலைவரால் நம் அத்தனை பேரின் கதியும் என்னவாகும் என்று தெரியுமா உங்கள் அனைவருக்கும்' என்றானாம்.
ஆம். இரக்கமும், மனிதமும் துளிர்த்த சில இடங்களிலும், ஹிட்லர் பற்றிய பயம் அதிகமாக இருந்ததால், அதிகாரிகள் அனைவரும் எமத தூதர்களாக செயல் பட்டனர். அந்த அளவுக்கு, ஹிட்லர் ஏதோ நெருக்கமாக நின்று தங்களை உற்று கவனிப்பது போன்ற அச்சமும் நடுக்கமான நம்பிக்கையும் அனைவரிடமும் பீடித்து இருந்தது.
 
வரும் பதிவுகளில் உலகப்புளுகன் கோயபல்ஸ் பற்றியும், ஹிட்லரின் கடைசி காலக் காதல் பற்றியும், அவரின் வீழ்ச்சிப் பற்றியும் காணலாம். ( நீண்ட இடைவெளிக்கு மன்னிக்கவும்.. தொடர்ந்து பதிய முயற்சிக்கிறேன்..)

Saturday, June 12, 2010

செம்மொழி மாநாடு பாடல், வரிகளுடன்..



[ அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.]
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும், பிறந்த பின்னர் 

யாதும் ஊரே யாவரும் கேளிர் 

உண்பது  நாழி   உடுப்பது  இரண்டே  

உறைவிடம்  என்பது  ஒன்றே  என,

உரைத்து  வாழ்ந்தோம்.  உழைத்து  வாழ்வோம்

தீதும்  நன்றும்  பிறர்  தர  வாரா  எனும்

நன்  மொழியே  நம்  பொன்  மொழியாம்  

போரைப் புறம்  தள்ளி  பொருளை  பொது  வாக்கவே  

அமைதி  வழி  காட்டும்  அன்பு  மொழி

அய்யன்  வள்ளுவரின்  வாய்  மொழியாம்

செம்மொழியான  தமிழ்  மொழியாம் 
செம்மொழியான  தமிழ்  மொழியாம்
செம்மொழியான  தமிழ்  மொழியாம்
செம்மொழியான  தமிழ்  மொழியாம் 

ஓர்  அறிவு  முதல்  ஆறறிவு  உயிரினம்  வரையிலே  
உணர்ந்திடும்  உடல்  அமைப்பை  பகுத்து  கூறும் 
  
ஓர்  அறிவு  முதல்  ஆறறிவு  உயிரினம்  வரையிலே  
உணர்ந்திடும்  உடல்  அமைப்பைப்  பகுத்து  கூறும் 

ஒல்காப்  புகழ்த்  தொல்காப்பியமும்,  ஒப்பற்ற  குறள்  கூறும்  உயர்  பண்பாடு  

ஒலிக்கின்ற  சிலம்பும்  மேகலையும்  சிந்தாமணியுடனே  

வளையாபதி  குண்டலகேசியும்   ஆ ... 

செம்மொழியான  தமிழ்  மொழியாம் 
செம்மொழியான  தமிழ்  மொழியாம்
செம்மொழியான  தமிழ்  மொழியாம்
செம்மொழியான  தமிழ்  மொழியாம்
செம்மொழி, செம்மொழி, தமிழ் மொழி ஆ ஆ தமிழ் மொழியாம்.. 

கம்ப  நாட்டாழ்வாரும்  கவி  அரசி அவ்வை  நல்லாளும்

எம்மதமும்  ஏற்றுப்  புகழ்கின்ற  

எம்மதமும்  ஏற்றுப்  புகழ்கின்ற  

எத்தனையோ  ஆயிரம்  கவிதை  நெய்வோர்  தரும்  

புத்தாடை  அனைத்துக்கும்  வித்தாக  விளங்கும்  மொழி

செம்மொழியான  தமிழ்  மொழியாம்  
செம்மொழியான  தமிழ்  மொழியாம் 
செம்மொழியான  தமிழ்  மொழியாம் 

ஆஆஅ  அகம்  என்றும்  புறம்  என்றும்  

வாழ்வை  அழகாக  வகுத்து  அளித்து , 
ஆதி அந்தமில்லாது இருக்கின்ற இனிய மொழி..

ஓதி வளரும் உயிரான உலக மொழி. 
ஓதி வளரும் உயிரான உலக மொழி.
நம்மொழி, நம்மொழி.. அதுவே..

செம்மொழியான  தமிழ்  மொழியாம்  
தமிழ் மொழி, தமிழ் மொழி, தமிழ் மொழியாம் ...
செம்மொழியான  தமிழ்  மொழியாம்  
செம்மொழியான  தமிழ்  மொழியாம்  
செம்மொழியான  தமிழ்  மொழியாம்  
 தமிழ்  மொழியாம்.. தமிழ்  மொழியாம்.. தமிழ்  மொழியாம்    
 செம்மொழியான  தமிழ்  மொழியாம்  
 தமிழ்  மொழியாம் , எங்கள்  தமிழ்  மொழியாம்.
 தமிழ்  மொழியாம் , எங்கள்  தமிழ்  மொழியாம்.  
செம்மொழியான  தமிழ்  மொழியாம்..  

வாழிய வாழியவே .. தமிழ் வாழிய வாழியவே..
வாழிய வாழியவே .. தமிழ் வாழிய வாழியவே..
செம்மொழியான  தமிழ்  மொழியாம்..  

பாடல் : கலைஞர் கருணாநிதி.
இசை : ஏ.ஆர்.ரகுமான்.
இயக்கம் : கௌதம் வாசுதேவன்.

சிறந்த தரத்தில் செம்மொழிப்  பாடலை, அதன் வரிகளுடன் பதிவிறக்கிக் கொள்ளுங்கள்..
தமிழின் பெருமை பலரைச் சென்றடைய, வாக்களித்து உதவுங்கள்...