Friday, April 02, 2010

ஐபிஎல் - ஒரு சிறிய வருத்தம்.




(அல்லது)



ஐபிஎல் போட்டிகள் நடை பெற்று கொண்டிருகின்றது... விறுவிறுப்பாகவே உள்ளது.. ஆனால் எனக்கு சிறிய நெருடல்.. அது சற்று மிகையான எண்ணமாக கூட இருக்கலாம்..
கிரிக்கெட் போட்டிகள் - பல விமர்சனங்கள் உடையதாக இருந்தாலும் நான் நம்புகிற ஒரு விஷயம்.. அது பல இந்தியர்களை ஒன்றினைக்கின்றது.. பல வித வேற்றுமைகள் நிறைந்துள்ள நமது நாட்டில் நம்மை இணைக்கும் சில முக்கிய விஷயங்களில் கிரிக்கெட்டும் ஒன்று என்று நம்புகிறேன்... எல்லையில் போரில் ஈடுபட்டு கொண்டிருக்கும் வீரர்களுக்கு, இந்திய கிரிக்கெட் போட்டிகள் மிக சிறந்த ஒரு உந்துகோலாக இருப்பதை நாம் மறுக்க முடியாது..
கல்கத்தா கங்குலியையும், பாம்பே சச்சினையும், டெல்லி சேவாகையும் நாம் இந்தியர்களாக தான் பார்த்து கொண்டிருந்தோம்.. சச்சின் நமது தேசத்தில் ஒருவன் என்று பெருமையுடன் கொண்டாடுகிறோம்...

ஆனால் ஐபிஎல்??????????
அவர்களை பிரித்து பார்க்க வைக்கிறதே.. சென்னை, பாம்பே, கல்கத்தா என்று குறுகிய வட்டத்தில் நம்மை அடைக்கின்றதோ என எண்ண வைக்கின்றது... சச்சின் அவுட் ஆக வேண்டும் என்று நினைக்கிறோம்... ஹைடன் விலாச வேண்டும் என்று வேண்டுகின்றோம்.. இது நல்லதா.. ஏற்கனவே கேரளா, கர்நாடகாவிடம் குடிமி பிடி சண்டை..
மாநிலங்கள் கடந்து நாம் ஒற்றுமையுடன் இருக்கும் சில விஷயங்களில் ஒன்றாக இதுவரை கிரிக்கெட் இருந்து வருகிறது..
இனியும் இருக்குமா...

அடிமையாகி போன தமிழக மக்கள்..

எப்படிப்பட்ட அடிமை என்று கேட்கின்றீர்களா.. நன்றி காட்டும் அடிமையாக போனோம்.. ஆம்.. நன்றி உடையவர்களாக இருப்பது தவறில்லை...எண்ணற்ற திட்டங்கள் மூலம் நமக்கு நன்மை செய்தவர்களுக்கு நன்றி காட்டினால் தவறில்லை.ஆனால் ஒன்றிரண்டு நாள் செலவிற்கு பணம் தருபவர்களுக்கு நன்றி காட்டுவது கேவலமானது.. அரசியலும் ஒரு வியாபாரம் தான்.. தற்போது மிகச் சிறந்த வியாபாரிகளுடன் திகழ்கிறது தமிழகம்.. பாமர மக்கள் ஏமாற்ற படுகிறோம் என தெரிந்தே ஏமாறுகிறார்கள்.. அதில் ஒரு வலி நிறைந்த சுகம் கிடைகின்றது போலும்...