Saturday, June 12, 2010

செம்மொழி மாநாடு பாடல், வரிகளுடன்..



[ அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.]
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும், பிறந்த பின்னர் 

யாதும் ஊரே யாவரும் கேளிர் 

உண்பது  நாழி   உடுப்பது  இரண்டே  

உறைவிடம்  என்பது  ஒன்றே  என,

உரைத்து  வாழ்ந்தோம்.  உழைத்து  வாழ்வோம்

தீதும்  நன்றும்  பிறர்  தர  வாரா  எனும்

நன்  மொழியே  நம்  பொன்  மொழியாம்  

போரைப் புறம்  தள்ளி  பொருளை  பொது  வாக்கவே  

அமைதி  வழி  காட்டும்  அன்பு  மொழி

அய்யன்  வள்ளுவரின்  வாய்  மொழியாம்

செம்மொழியான  தமிழ்  மொழியாம் 
செம்மொழியான  தமிழ்  மொழியாம்
செம்மொழியான  தமிழ்  மொழியாம்
செம்மொழியான  தமிழ்  மொழியாம் 

ஓர்  அறிவு  முதல்  ஆறறிவு  உயிரினம்  வரையிலே  
உணர்ந்திடும்  உடல்  அமைப்பை  பகுத்து  கூறும் 
  
ஓர்  அறிவு  முதல்  ஆறறிவு  உயிரினம்  வரையிலே  
உணர்ந்திடும்  உடல்  அமைப்பைப்  பகுத்து  கூறும் 

ஒல்காப்  புகழ்த்  தொல்காப்பியமும்,  ஒப்பற்ற  குறள்  கூறும்  உயர்  பண்பாடு  

ஒலிக்கின்ற  சிலம்பும்  மேகலையும்  சிந்தாமணியுடனே  

வளையாபதி  குண்டலகேசியும்   ஆ ... 

செம்மொழியான  தமிழ்  மொழியாம் 
செம்மொழியான  தமிழ்  மொழியாம்
செம்மொழியான  தமிழ்  மொழியாம்
செம்மொழியான  தமிழ்  மொழியாம்
செம்மொழி, செம்மொழி, தமிழ் மொழி ஆ ஆ தமிழ் மொழியாம்.. 

கம்ப  நாட்டாழ்வாரும்  கவி  அரசி அவ்வை  நல்லாளும்

எம்மதமும்  ஏற்றுப்  புகழ்கின்ற  

எம்மதமும்  ஏற்றுப்  புகழ்கின்ற  

எத்தனையோ  ஆயிரம்  கவிதை  நெய்வோர்  தரும்  

புத்தாடை  அனைத்துக்கும்  வித்தாக  விளங்கும்  மொழி

செம்மொழியான  தமிழ்  மொழியாம்  
செம்மொழியான  தமிழ்  மொழியாம் 
செம்மொழியான  தமிழ்  மொழியாம் 

ஆஆஅ  அகம்  என்றும்  புறம்  என்றும்  

வாழ்வை  அழகாக  வகுத்து  அளித்து , 
ஆதி அந்தமில்லாது இருக்கின்ற இனிய மொழி..

ஓதி வளரும் உயிரான உலக மொழி. 
ஓதி வளரும் உயிரான உலக மொழி.
நம்மொழி, நம்மொழி.. அதுவே..

செம்மொழியான  தமிழ்  மொழியாம்  
தமிழ் மொழி, தமிழ் மொழி, தமிழ் மொழியாம் ...
செம்மொழியான  தமிழ்  மொழியாம்  
செம்மொழியான  தமிழ்  மொழியாம்  
செம்மொழியான  தமிழ்  மொழியாம்  
 தமிழ்  மொழியாம்.. தமிழ்  மொழியாம்.. தமிழ்  மொழியாம்    
 செம்மொழியான  தமிழ்  மொழியாம்  
 தமிழ்  மொழியாம் , எங்கள்  தமிழ்  மொழியாம்.
 தமிழ்  மொழியாம் , எங்கள்  தமிழ்  மொழியாம்.  
செம்மொழியான  தமிழ்  மொழியாம்..  

வாழிய வாழியவே .. தமிழ் வாழிய வாழியவே..
வாழிய வாழியவே .. தமிழ் வாழிய வாழியவே..
செம்மொழியான  தமிழ்  மொழியாம்..  

பாடல் : கலைஞர் கருணாநிதி.
இசை : ஏ.ஆர்.ரகுமான்.
இயக்கம் : கௌதம் வாசுதேவன்.

சிறந்த தரத்தில் செம்மொழிப்  பாடலை, அதன் வரிகளுடன் பதிவிறக்கிக் கொள்ளுங்கள்..
தமிழின் பெருமை பலரைச் சென்றடைய, வாக்களித்து உதவுங்கள்...

4 comments:

Ilakkuvanar Thiruvalluvan said...

புதிய வரிகளில் எழுதியிருந்தால் பல்லாயிரம் பாடல்களில் ஒன்றாகத்தான் இருக்கும். அவ்வாறில்லாமல் தமிழர்களின் பண்பாட்டு அறநெறிகளையும் வாழ்வியல் நெறிகளையும் உரைக்கும் மூல வரிகளை அவ்வாறே எடுத்தாண்டிருப்பது இப்பாடலின் தனிச்சிறப்பாகும். ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே திகழ்ந்த நெறியுரைகள் என்னும் பொழுது செந்தமிழின் சிறப்பு
நன்கு புரியும். இப்பாடலைப் பதிவிறக்கம் செய்ய உதவியாக இங்கே பதிந்துள்ளமைக்குப் பாராட்டுகளும் நன்றியும். எனினும் ஒற்றுப்பிழைகளுடன் இங்கே இடம் பெற்றிருக்கின்றன. நான் திருத்தி அளித்துள்ளேன். அவ்வாறே திருத்துக. ஆனால், மூல வரிகள் பற்றிக் குறிப்பிட்டவை நாம் அறிந்து கொள்ளவே அன்றித் திருத்த அல்ல. அதனை மூலவர்தான் திருத்த வேண்டும்.

1.) கேளீர் என்றால் கேளுங்கள் என்று பொருள். அவ்வாறுதான் தவறாக ஒலிக்கின்றனர். கேளிர் என்றால் உறவினர் என்று பொருள். இதுவே சரி.

2.) வாராய் என்றால் பிறரால் நன்மையும் தீமையும் வரவேண்டும் என்று சொல்வதாகப் பொரு்ள. வாரா என்று இருக்க வேண்டும்.நமக்கு ஏற்படும் நன்மைக்கும் தீமைக்கும் பிறர் காரணமல்ல என்பது பொருள்.
3-5.)போரை புறம் தள்ளி பொருளை பொது வாக்கவே - போரைப் புறம் தள்ளிப் பொருளைப் பொதுவாக்கவே என உரிய மெய்யெழுத்துகள் இடையில் வர வேண்டும்.

6-7.) அமைப்பை பகுத்து கூறும்- அமைப்பைப் பகுத்துக் கூறும் என வர வேண்டும்.
8-9.) ஒல்கா புகழ் தொல்காப்பியமும்- ஒல்காப் புகழ்த் தொல்காப்பியமும் என வர வேண்டும்.
10.) உயர் பண்பாடு- பண்பாடும் என்றால் திருக்குறளைச் சிற்பிக்கும். ஆனால், ஒலிக்கின்ற என்பது விடுபாடாகப் போகும்; ம் இல்லையேல் பண்பாடு ஒலிக்கின்றது சிலம்பிற்கு மட்டும் என்றாகிறது. மூலத்தில் தவறு உள்ளது.
11.)செம்மொழியான தமிழ் மொழியாம் - இவ்வாறு சொல்வதால் இப்பொழுதுதான் தமிழ் செம்மொழியானது என்னும் தவறான பொருள் வருகிறது. செம்மொழியாய்த் தோன்றிய செந்தமிழாம் என்றால் வரலாற்று உண்மையைக் கூறியதாக அமையும்.
12.)தமிழ் மொழி ஆ ஆ- என்றால் ஐயத்தில் (சந்தேகத்தில்) கேள்வி கேட்பதாக உள்ளது. தமிழ்மொழியாஅம் என நீட்டி ம் சேர்க்க வேண்டும்.
13.) கம்பர் நாட்டாழ்வாரும்-இடையிலே ர் தேவையில்லை. சேர்த்தால் கம்பரின் நாட்டைச் சேர்ந்த ஆழ்வார் என்றாகிறது.
14.)கவி அரசியவை நல்லாளும் -ஔவை (அவ்வை) நல்லாளும் என இருக்க வேண்டும். இல்லையேல் ஔவையாரைக் குறிக்காது; கவியரசியவை என்றால் கவிஅரசிகள் சேர்ந்துள்ள அவையை (சபையை)க் குறிக்கும்.
15.) ஏற்று புகழ்கின்ற - ஏற்றுப் புகழ்கின்ற என வர வேண்டும்.
16.) கவிதை நெய்வோர் - நெய்வோரும் என்று இருக்க வேண்டும். மூலப்பிழையா? பாடும் பொழுது ஏற்பட்ட பிழையா எனத் தெரியவில்லை.
17.) வித்தாக விலகும் மொழி - வித்தாக விளங்கும் மொழி என்றிருக்க வேண்டும். இல்லையேல் எதிரான பொருளைத் தரும்.
18.) அகம், புறம் பற்றிக் கூறுகின்ற வரிகள் காப்பியங்களைக் குறிக்கும் முன்னர் வந்திருக்க வேண்டும். அதுதான் வரலாற்று முறைப்படி அமைந்தனவாய் இருக்கும். சங்க இலக்கியங்களுக்குப் பின் தோன்றியவைதாமே காப்பியங்கள்.
19-21.)செம்மொழப் பாடலை,

பதிவிறக்கிக் கொள்ளுங்கள்,
பலரைச் சென்றடைய, என ஒற்றெழுத்துகள் சேர்க்கப்படடிருக்க வேண்டும.
22.) ரகுமான் - இரகுமான்
என்பதுதானே தமிழ் மரபாய் இருக்க முடியும்.
மீண்டும் நன்றியுடன்
இலக்குவனார் திருவள்ளுவன்

நாடோடித்தோழன் said...

@@இலக்குவனார் திருவள்ளுவன்
என்னால் ஆனத் தவறுகளைத் திருத்தி விட்டேன்.. google transliteration உபயோகித்து வரிகளை அமைத்தேன் ..
கவனக் குறைவால் தவறு நேர்ந்து விட்டது.. மன்னியுங்கள்.. நீங்கள் சுட்டிக் காட்டியவைகளில் பெரும்பாலானத் தவறுகளை நானும் அறிந்தே செய்திருந்தேன். மெத்தனமாக இருந்ததற்கு வருந்துகின்றேன். வருகைக்கும், திருத்தியதற்கும் நன்றி..

Ilakkuvanar Thiruvalluvan said...

தவறுகளை உணர்ந்து திருத்திக் கொள்வது என்பது உயரந்த பண்பு. பாராட்டுகள். அன்புடன் இலக்குவனார திருவள்ளுவன்

SENTHILKUMARAN said...

யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பதை கேளீர் என்று தவறாக ரகுமான் பாடியுள்ளார். இவ்வாறு பல தவறுகள் உள்ளது.

Post a Comment