Friday, April 02, 2010

ஐபிஎல் - ஒரு சிறிய வருத்தம்.




(அல்லது)



ஐபிஎல் போட்டிகள் நடை பெற்று கொண்டிருகின்றது... விறுவிறுப்பாகவே உள்ளது.. ஆனால் எனக்கு சிறிய நெருடல்.. அது சற்று மிகையான எண்ணமாக கூட இருக்கலாம்..
கிரிக்கெட் போட்டிகள் - பல விமர்சனங்கள் உடையதாக இருந்தாலும் நான் நம்புகிற ஒரு விஷயம்.. அது பல இந்தியர்களை ஒன்றினைக்கின்றது.. பல வித வேற்றுமைகள் நிறைந்துள்ள நமது நாட்டில் நம்மை இணைக்கும் சில முக்கிய விஷயங்களில் கிரிக்கெட்டும் ஒன்று என்று நம்புகிறேன்... எல்லையில் போரில் ஈடுபட்டு கொண்டிருக்கும் வீரர்களுக்கு, இந்திய கிரிக்கெட் போட்டிகள் மிக சிறந்த ஒரு உந்துகோலாக இருப்பதை நாம் மறுக்க முடியாது..
கல்கத்தா கங்குலியையும், பாம்பே சச்சினையும், டெல்லி சேவாகையும் நாம் இந்தியர்களாக தான் பார்த்து கொண்டிருந்தோம்.. சச்சின் நமது தேசத்தில் ஒருவன் என்று பெருமையுடன் கொண்டாடுகிறோம்...

ஆனால் ஐபிஎல்??????????
அவர்களை பிரித்து பார்க்க வைக்கிறதே.. சென்னை, பாம்பே, கல்கத்தா என்று குறுகிய வட்டத்தில் நம்மை அடைக்கின்றதோ என எண்ண வைக்கின்றது... சச்சின் அவுட் ஆக வேண்டும் என்று நினைக்கிறோம்... ஹைடன் விலாச வேண்டும் என்று வேண்டுகின்றோம்.. இது நல்லதா.. ஏற்கனவே கேரளா, கர்நாடகாவிடம் குடிமி பிடி சண்டை..
மாநிலங்கள் கடந்து நாம் ஒற்றுமையுடன் இருக்கும் சில விஷயங்களில் ஒன்றாக இதுவரை கிரிக்கெட் இருந்து வருகிறது..
இனியும் இருக்குமா...

6 comments:

தேசாந்திரி-பழமை விரும்பி said...

////சச்சின் அவுட் ஆக வேண்டும் என்று நினைக்கிறோம்... ஹைடன் விலாச வேண்டும் என்று வேண்டுகின்றோம்.. ////
நிதர்சனமான வார்த்தைகள்...
வாழ்த்துக்கள்.....

vignaani said...

இதுவும் I P L பற்றியதுதான். நீங்கள் எழுதியதிலிருந்து கொஞ்சம் விலகியது: ஒரு "வளரும்" (அதாவது ஏழை) நாடான இந்தியா இவ்வளவு கோடிகளை அழிக்கும் இது போன்ற விளையாட்டு அவசியம் தானா? இந்த பணத்தில் பல வறுமை ஒழிப்பு திட்டங்களோ, சமூக நல திட்டங்களோ எடுத்துக்கொள்ள முடியும்; இல்லையெனில், பல விளையாட்டுகளில் பயிற்சி, ஆடுகளங்கள் அமைத்தல் போன்ற திட்டங்களோ நிறைவேற்றுதல் இந்த ஐ. பீ. எல் கிரிக்கெட்டை விட நல்லா இருக்கும் என்பது சாமானியர்களின் ஆதங்கம்

பொன் மாலை பொழுது said...

அரசு மற்றும் தனியார், பொதுமக்கள் என எல்லோருக்கும் ஓட்டு மொத்த மனபாண்மையும்
மாறி போய் விட்டது.சகலருக்கும் விரைவில் பணம் அதுவும் நிறைய வரவேண்டும்.
இதற்காக யாரும் எதுவும் செய்யலாம் செய்கிறார்கள்.கடவுளும்.பக்தியும் கூட இந்த வெள்ளத்தில்
அடித்துக்கொண்டு போகும் போது நாட்டு பற்றாவது??

நாடோடித்தோழன் said...

///கடவுளும்.பக்தியும் கூட இந்த வெள்ளத்தில்
அடித்துக்கொண்டு போகும் போது நாட்டு பற்றாவது??///

பக்தி இல்லையென்றால் கூட கடவுள் வந்து தண்டிக்க போவதில்லை...
மற்ற மனிதற்கு தொல்லையும் இல்லை...
ஆனால் நாட்டு பற்று இல்லா நிலை அப்பாவி மக்களை அல்லவா பாதிக்கிறது..

விக்னேஷ்வரி said...

நல்ல கேள்வி தான். ஆனால் விடை சாதகமாக அமையப் போவதில்லை.

நாடோடித்தோழன் said...

//நல்ல கேள்வி தான். ஆனால் விடை சாதகமாக அமையப் போவதில்லை//
அமைய வேண்டும் என்ற நப்பாசை எனக்கு உள்ளது..

Post a Comment